குஜராத் அரசை ஒரே வார்த்தையால் அதிர வைத்த "தனி ஒருவன்"!

உலகத்தில் நடக்கும் பிரச்சணைகளை கவனிக்க நேரம் தேவைப்படுவதால், அலுவலகத்திற்கு வர இயலாது என குஜராத் அரசு அதிகாரி ஒருவர் பரபரப்பு கடிதத்தினை தனது மேலதிகாரிக்கு எழுதியுள்ளார்!

Last Updated : May 19, 2018, 04:52 PM IST
குஜராத் அரசை ஒரே வார்த்தையால் அதிர வைத்த "தனி ஒருவன்"! title=

அகமதாபாத்: உலகத்தில் நடக்கும் பிரச்சணைகளை கவனிக்க நேரம் தேவைப்படுவதால், அலுவலகத்திற்கு வர இயலாது என குஜராத் அரசு அதிகாரி ஒருவர் பரபரப்பு கடிதத்தினை தனது மேலதிகாரிக்கு எழுதியுள்ளார்!

குஜராத் மாநில அரசு அலுவலகத்தில் பணிபுரிபவர் ரமேஷ் சந்திர பிபார். இவர் கடந்த 8 மாதங்களில் 16 நாட்கள் மட்டுமே அலுவலகம் சென்றுள்ளார். இதுகுறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனது மேல் அதிகாரிக்கு ரமேஷ் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

  • நான் கடவுளின் அவதாரம், விஷ்ணுவிம் 10-வது அவதாரமான கல்கி அவதாரம் நானே. எனவே என்னால் அலுவலகத்துக்கு வர இயலாது.
  • ‘உலக மக்களின் இன்னல்களை போக்க வீட்டில் நோன்பு இருக்கிறேன்’ 
  • “பிரபஞ்சத்தின் 5-வது பரிமாணத்துக்குள் நுழைந்து உலக மனசாட்சியை மாற்றுவதற்காக வீட்டில் தவம் செய்து வருகிறேன்.
  • தற்போது என்னால் தான் நாட்டில் மழையே பெய்கிறது

என குறிப்பிட்டு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். மேலும் மேற்கூறிய விஷயங்கள் அனைத்தினையும் விரைவில் நிரூபிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தெளிவுபடுத்திக்கொள்ள செய்தியாளர்கள் ரமேஷ் சந்திரா-வை சந்தித்து பேசுகையில்... "கடந்த 2010-ஆம் ஆண்டில், தான் கல்கி அவதாரம் என்பதை உள்ளுணர்வின் அறிந்து கொண்டேன். அலுவலகத்தில் என்னை சும்மா உட்கார வைக்க அதிகாரிகள் விரும்புகிறார்கள், ஆனால் நான் வறட்சியிலிருந்து நாட்டை காப்பாற்ற விரும்புகின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்!

Trending News