குஜராத்தில் காங்கிரஸ் 27 ஆண்டுகால வனவாசத்தை முடிக்குமா? இல்லை அஞ்ஞாத வாசமா?

 Congress Status In Gujrat: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் 27 ஆண்டுகால வனவாசம் முடிவுக்கு வருமா? இல்லை வெற்றி பெறும் எம்.எல்.ஏக்கள் அஞ்ஞாத வாசத்திற்கு அனுப்பப்படுவார்களா? என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 8, 2022, 08:55 AM IST
  • குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை
  • கருத்துக் கணிப்புகள் நிதர்சனமாகுமா?
  • பாரத் ஜோடோ யாத்திரையின் எதிரொலி என்ன?
குஜராத்தில் காங்கிரஸ் 27 ஆண்டுகால வனவாசத்தை முடிக்குமா? இல்லை அஞ்ஞாத வாசமா? title=

நியூடெல்லி: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் 27 ஆண்டுகால வனவாசம் முடிவுக்கு வருமா? இல்லை வெற்றி பெறும் எம்.எல்.ஏக்கள் அஞ்ஞாத வாசத்திற்கு அனுப்பப்படுவார்களா? என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. வாக்குகள் எண்ணத் தொடங்கும்போது இருக்கும் நிலையும், கருத்துக் கணிப்புகளும் எந்த சமயத்தில் வேண்டுமானாலும் மாறலாம் என்பதால், அனைவரின் கவனமும் வாக்கு எண்ணிக்கை தரவுகளில் குவிந்திருக்கின்றன.

தற்போது இறங்குமுகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆளும் கட்சியாக இருந்தது. ஆனால், காலப்போக்கில், எதிர்கட்சி என்ற அந்தஸ்தையும் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது. 27 ஆண்டுகளுக்கு முன் குஜராத் மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சிக்கு, இந்தத் தேர்தல் ஆசுவாசம் தருமா என்ற கேள்விகள் எழுகின்றன.

ஆனால், கருத்துக் கணிப்புகள் சொல்வதோ காங்கிரஸ் கட்சியின் வனவாசம் அஞ்ஞாத வாசமாக மாறிவிடும் என்று சொல்கிறது. எது எப்படியிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் முயற்சியில், பாரத் ஜோடோ யாத்திரையில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | முதல் திருநங்கை வார்டு கவுன்சிலர் போபி ஆம் ஆத்மி கட்சி

இதனிடையே, குஜராத் சட்டசபைதேர்தல் முடிவுகளை முன்னிட்டு காங்கிரஸ் நேற்று அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்வி ஒருபுறம் என்றால், வெற்றி பெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை வெளியே அனுப்புவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கியது.  

குஜராத்தில் ஆட்சியில் இருந்து 27 ஆண்டுகால வனவாசம் இந்த முறை நிறைவடையும் என்று காங்கிரஸ் கட்சி மேலிடம் நம்புகிறது, அதனால்தான் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வெளியே கவுண்ட்டவுன் கடிகாரத்தை நிறுவியுள்ளது, அது வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு நிறுத்தப்படும். அதாவது வாக்கு எண்ணிக்கை தெளிவாகும் வரை கடிகாரம் இயங்கும். கடிகாரம் நிற்கும் போது பாஜக ஆட்சி இருக்காது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இருப்பினும், கருத்துக்கணிப்பு புள்ளிவிபரங்கள் காங்கிரஸின் இந்தக் கூற்றுக்கு எதிராக கேள்விகளை எழுப்புகின்றன.
 
தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, காங்கிரஸ் அதிரடியாக களமிறங்கியுள்ளது. குஜராத் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கூட்டம் குஜராத் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநில பொறுப்பாளருமான ரகு சர்மா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வாக்குப்பதிவு புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, முடிவுகளுக்கு பிந்தைய நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டன.

மேலும் படிக்க | Delhi MCD Election : பாஜகவை துடைத்தெறிந்த ஆம் ஆத்மி - குஜராத்திலும் வேட்டையை தொடருமா... முழு அலசல்!

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல இடங்கள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கணித்துள்ளது. எனவே, எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற கணிப்பில் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமாக இருந்தால், மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை காங்கிரஸ் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று தேர்தல் வாக்குகள் எண்ணப்படும்போது காலை 11 மணிக்குப் பிறகு, இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும். மூத்த தலைவர்களிடம் இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக தகவல்களை அளிக்கவில்லை.

முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் பாரத் சிங் சோலங்கியும், காங்கிரஸும் நம்புகின்றனர். பாஜக ஆட்சி அமைக்கப் போவதாகக் கூறப்பட்ட கருத்துக் கணிப்புகளை காங்கிரஸ் கட்சி கருத்துக் கணிப்புகளை நிராகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 125 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று இதுவரை அக்கட்சி கூறிவருகிறது.  மறுபுறம், வெற்றி கொண்டாட்டத்திற்கான முன்கூட்டிய ஏற்பாடுகள் பாஜகவில் தொடங்கியுள்ளன.  

தேர்தல் முடிவுகள் எக்சிட் போல் சொல்வதுபோல் அமையுமா அல்லது அதிர்ச்சி அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காங்கிரஸின் கூற்றுகளும் புள்ளிவிவரங்களும் பொருந்துமா இல்லையா? இன்னும் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

மேலும் படிக்க | குஜராத் தேர்தல் முடிவுகள் ஆட்சியை தக்க வைத்து சரித்திரம் படைக்குமா பாஜக?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News