சென்னை: நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) எண்ணப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொருத்த வரை மக்களவை தேர்தலை காட்டிலும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முக்கிய விசியமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக இடைத்தேர்தல் குறித்தே அதிகமாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ஏனென்றால் 22 தொகுதிகளில் குறைந்தது 5 தொகுதியாவது அதிமுக வெற்றி பெற வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இல்லையெனில் ஆட்சி பறிபோகும் நிலை ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.
இந்தநிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால், 22 இடங்களில் திமுக மற்றும் அதிமுக எத்தனை இடங்களை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.
தற்போதைய நிலவரபப்டி திமுக 15 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.