Gujarat Himachal Election Results 2022 : குஜராத், ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. அதுமட்டுமின்றி, உத்தரபிரதேசம், பீகார் உள்பட 6 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
முன்னதாக, டெல்லி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், 15 ஆண்டுகளாக டெல்லி உள்ளாட்சி அமைப்பில் கோலோச்சி இருந்த பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி பெற்றிருந்தது. அங்கு மொத்தம் இருந்த 250 வார்டுகளில், ஆம் ஆத்மி 134 இடங்களையும், பாஜக 104 இடங்களையும் வென்றது. காங்கிரஸ் 9 இடங்களிலும், மற்றவைகள் 3 இடங்களிலும் வென்றன.
2015ஆம் ஆண்டில் இருந்தே, டெல்லியின் முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 7 ஆண்டுகள் கழித்து உள்ளாட்சி அமைப்பை கைப்பற்றியுள்ளார். இந்த தேர்தலில், நோட்டாவின் பங்கு அளப்பரியது.
மூன்று உள்ளாட்சிகளை ஒன்றிணைத்த பின் நடத்தப்பட்ட முதல் தேர்தல் என்பதால், மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில், கடந்த டிச. 4ஆம் தேதி அதன் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. ஒரு கோடியே 45 லட்சத்து 5 ஆயிரத்து 358 பேருக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தது. இதில், 50.48 சதவீத வாக்குகள் பதிவாகின.
பதிவான வாக்குகளில் சுமார் 57 ஆயிரம் வாக்குகள் நோட்டாவிற்கு பதிவாகியுள்ளது. இது மொத்த வாக்குப்பதிவில் 0. 78 சதவீதமாகும். பல வார்டுகளில் நோட்டாவின் வாக்குதான் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.
இந்நிலையில், இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே எண்ணப்பட்டு வரும் குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்களிலும் நோட்டாவின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும், குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டியிருக்கும் என்பதால், வாக்கு பெரியளவில் சிதறாது.
ஆனால், பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவும் இந்த நேரத்தில், நோட்டா வாக்குகளை சிதறடிக்க அதிக வாய்ப்புள்ளது. இரு பெரும் கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி போட்டியிடும் நிலையில், இரு கட்சிகளின் அதிருப்தியாளர்கள் அவர்களுக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றாலும், அவர்கள் நோட்டா பக்கம் சாயவும் அதிக வாய்ப்புள்ளது.
டெல்லியில் நோட்டா வாக்குகள் பாஜகவை பாதித்தது என்றால், குஜராத் ஹிமாச்சலில் முறையே ஆம் ஆத்மி, காங்கிரஸை அவை பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, இன்று தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியிடப்பட்ட பின், புள்ளிவிவரங்களை பார்த்தால் நோட்டாவின் தாக்கம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளலாம்.
Himachal Pradesh Election 2022 Live Updates: ஹிமாச்சல் தேர்தலில் வெல்லப்போவது யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ