நாடே மகிழ்ச்சியாக இருக்கும் போது, காங்கிரஸ் மட்டும் கலங்குகிறது: பிரதமர் மோடி

நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து, ​​காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வருத்தமாக இருக்கிறது என்று தெரியவில்லை என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 15, 2019, 04:02 PM IST
நாடே மகிழ்ச்சியாக இருக்கும் போது, காங்கிரஸ் மட்டும் கலங்குகிறது: பிரதமர் மோடி title=

குருக்ஷேத்ரா: சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (செவ்வாய்க்கிழமை) குருக்ஷேத்திரத்தில் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றினார். அப்பொழுது பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி மற்றும் தலைவர்களை கடுமையாக தாக்கி பேசினார். "இந்த தசராவில் இந்தியா தனது முதல் ரஃபேல் போர் விமானத்தை பிரான்சிலிருந்து பெற்றது. இது உங்களுக்கு மகிழ்ச்சியா இல்லையா? நம் நாட்டின் வலிமை அதிகரிக்கும் போது, நமக்கு பெருமையும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து, ​​காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வருத்தமாக இருக்கிறது என்று தெரியவில்லை எனக் கூறினார்.

இன்று ஹரியானாவில் பிரதமர் மோடி தனது இரண்டாவது தேர்தல் பேரணியில் பேசியதாவது, மகாபாரத நிலமான குருக்ஷேத்ராவுக்கு வந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குருக்ஷேத்ராவின் அழகை யாரும் மறக்க முடியாது. குருநானக்கின் 550 பிரகாஷ் பர்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நாளில், இன்று நான் இங்கு வந்துள்ளேன். கர்த்தார்பூர் நடைபாதையும் திறக்கப் போகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 70 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அரசியல் பின்னடைவை நாங்கள் சரிசெய்கிறோம் என்றார். 

மேலும் மோடி கூறுகையில், மக்களவையில் நாங்கள் மூன்று பெரிய உறுதிமொழி செய்திருந்தோம். அதாவது தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி தேசிய உணர்வை ஊட்டுவோம். விவசாயிகளின் வருமானத்தை இருமடங்கு ஆக்குவோம் எனக் கூறியிருந்தோம். இன்று என்னால் சொல்ல முடியும். மிகக்குறுகிய காலத்தில், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 

நாடே தசரா கொண்டாடிய நாளில் ரபேல் விமானத்தை இந்தியா பெற்றது. இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள்... நமது இராணுவம் ரஃபேல் போர் விமானத்தை பெற்றது, உங்களுக்கு மகிழ்ச்சியா, இல்லையா? நாடு வலுவாகிவிட்டது என்று நினைத்தீர்களா, இல்லையா? இந்திய இராணுவத்தின் வலிமை அதிகரித்ததா? போன்ற கேள்விகளை மக்களை பார்த்து கேட்டார். 

மக்களாகிய நீங்கள் இதைப்பற்றி பெருமிதம் கொள்கிறீர்கள், ஆனால் காங்கிரஸ் தலைவர்களுக்கு என்ன ஆகிவிடுகிறது என்று தெரியவில்லை. நாடு மகிழ்ச்சியாக இருக்கும்போது, காங்கிரஸ் கலங்குகிறது என காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.

Trending News