Group 4 தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்: TNPSC அறிவுறுத்தல்

TNPSC Exam Group 4 Instructions: தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்னென்ன? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவுறுத்தல்கள்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 23, 2022, 10:40 PM IST
  • காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும்
  • 12.45 மணிக்கு முன்னதாக யாரும் தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது
  • கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்
Group 4 தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்: TNPSC அறிவுறுத்தல் title=

TNPSC Exam Group 4 Instructions for Candidates: தமிழ்நாடு மாநில அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி, நேர்காணல்களை ஏற்பாடு செய்து ஆட்சேர்ப்பு செய்யும் பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நாளை குரூப் 4 தேர்வுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்த தேர்வு தொடர்பாக தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்பதைப் பற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. 

தேர்வில் கலந்துக் கொள்பவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விடுத்துள்ள அறிவுறுத்தல்கள் இவை:

தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும்

9 மணிக்கு OMR தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்படும்

மேலும் படிக்க | TNPSC Group 4 Exam: தமிழகம் முழுவதும் நாளை குரூப்-4 தேர்வு

9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும்

12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது

தேர்வர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்

செல்போன்கள் மற்றும் இதர பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை

தேர்வர்கள் தங்களுடைய கையெழுத்தை OMR தாளில் இரண்டு இடங்களில் பதிவு செய்ய வேண்டும்

மேலும் படிக்க: தேசிய விருதாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

இடதுகை பெருவிரல் ரேகையை OMR தாளில் தேர்வு முடிந்த பின் பதிவிட வேண்டும்

OMR தாளில் கருப்பு பால் பாய்ண்ட் பேனாவைத் தவிர பென்சில் அல்லது வேறு பேனாவில் எழுதக் கூடாது

OMR தாளில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும்

மேலும் படிக்க: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு: ராசிபுரம் மாணவி யோகேஸ்வரி மாநில அளவில் முதலிடம்

OMR தாளில் ஒரு கட்டத்தை தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களை தேர்வர்கள் விடைகளாக குறிக்கக்கூடாது ( Shade செய்யக்கூடாது )

விடைதெரியாத கேள்விக்கு OMR தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் Shade செய்ய வேண்டும்.

நாளை நடைபெறும் தேர்வில், பெண்கள் 12,67,457 மற்றும் ஆண்கள் 9,35,354 பேர் பங்கேற்கிறார்கள். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள், 316 தாலுகா மையங்களில் உள்ள 7,689 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு எழுதுபவர்களையும், தேர்வு மையங்களையும் கண்காணிக்க 534 பறக்கும் படைகள் பணிகள் ஈடுபட உள்ளனர்.

தமிழக அரசின் காலியாக உள்ள 7301 பணியிடங்களுக்கான தேர்வு இது. இந்த குரூப்-4 தேர்வில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கேற்ப செயல்திறனின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மேலும் படிக்க | ஜூலை 28 ஆம் தேதி சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News