School Re-opening: இந்த மாநிலத்தில் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளன

பல மாநிலங்களில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாகாலாந்து மாநிலத்தில், சிறிய வகுப்பு பள்ளிகளுக்கும் பள்ளிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 16, 2021, 09:21 PM IST
  • முகமூடிகளை அணிந்து குறைந்தபட்சம் ஆறு அடி சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாகும் என்று நடத்தை நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
  • வழிகாட்டுதல்களை பள்ளியில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைவரும் பின்பற்ற வேண்டும்.
School Re-opening: இந்த மாநிலத்தில் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளன title=

பல மாநிலங்களில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாகாலாந்து மாநிலத்தில், சிறிய வகுப்பு பள்ளிகளுக்கும் பள்ளிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நாகாலாந்து அரசு மார்ச் 22 முதல் மாநில பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகளை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளது. இது தொடர்பாக முதன்மை செயலாளர் (உள்துறை) அபிஜித் சின்ஹா ​​செவ்வாய்க்கிழமை விதிமுறைகளையும் நடைமுறைகளையும் வெளியிட்டார், இதில் பள்ளிகளில் கோவிட் -19 ( COVID-19) பரவுவதை தடுக்கும் வகையிலான பாதுகாக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் அரசு பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

முகமூடிகளை அணிந்து குறைந்தபட்சம் ஆறு அடி சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாகும் என்று நடத்தை நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை பள்ளியில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைவரும் பின்பற்ற வேண்டும்.

6 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் பிப்ரவரி 8 முதல் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசு பொது முடக்கத்தை அறிவித்ததை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டன. மாநிலத்தில் புதிதாக கொரோனா வைரஸுக்கு ஆளான நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 14 ஆகும். இதுவரை, மாநிலத்தில் மொத்தம் 12,225 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இதுவரை 91 பேர் தொற்று காரணமாக இறந்துள்ளனர்.

ALSO READ | தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... தலைமை செயலர் நடத்திய முக்கிய ஆலோசனை..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News