பவர்கிரிட் கார்ப்பரேஷனில் வேலை வேண்டுமா? 800 வேலைவாய்ப்பு! இப்படி விண்ணப்பிக்கவும்

PGCIL Recruitment 2022: பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் 800 ஃபீல்டு இன்ஜினியர்கள் மற்றும் ஃபீல்ட் சூப்பர்வைசர்கள் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 17, 2022, 05:18 PM IST
  • பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வழங்கும் வேலைவாய்ப்புகள்
  • ஃபீல்டு இன்ஜினியர்களுக்கான ஆட்சேர்ப்பு
  • ஃபீல்ட் சூப்பர்வைசர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
பவர்கிரிட் கார்ப்பரேஷனில் வேலை வேண்டுமா? 800 வேலைவாய்ப்பு! இப்படி விண்ணப்பிக்கவும் title=

PGCIL Recruitment 2022: பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (பிஜிசிஐஎல்) 800 ஃபீல்டு இன்ஜினியர்கள் (எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், ஐடி) மற்றும் ஃபீல்ட் சூப்பர்வைசர்கள் (எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் ஆல் இந்தியா பாசிசிஸ்) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. . தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 21, 2022 முதல் விண்ணப்பிக்கலாம்.

www.pwergrid.in என்ற இணையதளத்தில் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் பணியாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். PGCIL ஆட்சேர்ப்பு 2022 தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

பணி தொடர்பான தகவல்கள்

வயது வரம்பு

இந்த ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பு அதிகபட்சம் 29 ஆண்டுகள். வயதைக் கணக்கிடுவதற்கான முக்கியமான தேதி 11.12.2022. அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

மேலும் படிக்க | 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் - அரசு வேலை ரெடி

விண்ணப்பக் கட்டணம்

ஜெனரல்/ OBC/ EWS (களப் பொறியாளருக்கு): ரூ. 400/-
Gen/ OBC/ EWS (கள மேற்பார்வையாளருக்கு): ரூ. 300/-
SC/ ST/PH/ESM: ரூ. 0/-
கட்டண முறை: ஆன்லைன்

PGCIL ஆட்சேர்ப்பு 2022 தேர்வு செயல்முறை

பொறியாளர் ஆட்சேர்ப்பு நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே முடிக்கப்படலாம். அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தால் மட்டுமே எழுத்துத் தேர்வு நடத்தப்படும். PGCIL களப் பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு 2022க்கான தேர்வு செயல்முறை பின்வரும் நிலைகளை உள்ளடக்கியது:

எழுத்துத் தேர்வு (50 தொழில்நுட்ப கேள்விகள் + 25 திறன் கேள்விகள்)
நேர்காணல் (பீல்டு இன்ஜினியர் பதவிக்கு மட்டும்)
ஆவண சரிபார்ப்பு
மருத்துவத்தேர்வு

மேலும் படிக்க | வேளாண் துறையில் மொத்தம் 160 காலியிடங்கள்! ஆள் எடுக்கிறது UPSC

PGCIL ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்கும் முறை
PGCIL ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்

PGCIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 இலிருந்து தகுதியைச் சரிபார்க்கவும்
www.powergrid.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்
கட்டணம் செலுத்துங்கள்
விண்ணப்பப் படிவத்தை அச்சிடவும்

மேலும் படிக்க | EPFO News: இனி இவர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News