உதவி பேராசிரியர் பணிக்கு PhD இனி கட்டாயமில்லை

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு, பிஎச்டி தகுதியை கட்டாயமில்லை என்றும்,  அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த விதியை பின்பற்ற வேண்டும்  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 30, 2021, 04:12 PM IST
  • உதவி பேராசிரியர் பணிக்கு PhD இனி கட்டாயமில்லை
  • நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் இதை பின்பற்ற வேண்டும்
  • மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு
உதவி பேராசிரியர் பணிக்கு PhD இனி கட்டாயமில்லை  title=

புதுடெல்லி: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போது உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான பிஎச்டி பட்டம் அவசியம். இந்த நிலையை தற்போது மத்திய கல்வி அமைச்சகம் மாற்றிவிட்டது. முன்னதாக, சில பல்கலைக்கழகங்கள் உதவி பேராசிரியர் பதவிக்கு பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று விதிமுறைகளை வைத்திருந்தன.
 
இதனால் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து கல்வி நிறுவனங்களும் உதவி பேராசிரியர் பதவிக்கு பிஎச்டி தேவை என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.  அதாவது, பிஎச்டி பட்டம் இல்லாதவர்களும் இனிமேல் உதவி பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 

ஆனால், இந்த விலக்கு தற்போதைய கல்வி அமர்வுக்கு மட்டுமே என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விலக்கு 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நெருக்கடியால், பல மாணவர்கள் தங்கள் பிஎச்டி ஆய்வறிக்கையை சரியான நேரத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை. இதன் காரணமாக, யுஜிசி (UGC) நெட் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போதைக்கு பிஎச்டி தேவையிலிருந்து விலக்கு கோரியிருந்தனர். தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 6,300 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

Also Read | அரசுப்பள்ளிகளில் "பிஎம்-போஜன்" பெயரில் மதிய உணவு - மத்திய அரசு

சமீபத்தில், டெல்லி பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய பல்வேறு துறைகளில் உதவி பேராசிரியர் நியமனங்களுக்கான விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த நியமனங்களுக்கு பிஎச்டி தகுதி கட்டாயமாக கோரப்பட்டது. இந்த விவகாரத்தில் விலக்கு அளிக்குமாறு ஆசிரியர் அமைப்புகள் கோரியுள்ளன. அதே நேரத்தில், டெல்லி பல்கலைக்கழகத் துறைகளின் நியமனங்களில் பிஎச்டி விதிமுறையிலிருந்து விலக்கு கோரியும், அடோக் ஆசிரியர்களுக்கு (adhoc teachers) 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கக் கோரியும் யுஜிசி தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டது.

 அடோக் ஆசிரியர்கள் நீண்ட காலமாக கற்பித்து வருகின்றனர் ஆனால் அவர்கள் நிரந்தரமாக்கப்படவில்லை என்று டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூறுகின்றனர். உதவி பேராசிரியர் (assistant professors) நியமனங்களில் பிஎச்டி கட்டாயமாக்கப்படுவது குறித்து ஆசிரியர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. எனினும், இப்போது கல்வி அமைச்சகத்தின் இந்த புதிய முயற்சிக்கு பிறகு, ஆசிரியர் அமைப்புகள் திருப்தி தெரிவித்துள்ளன.

இப்போது ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சகம் அளித்த இந்த நிவாரணம் நல்ல அணுகுமுறை என்று அனைவராலும் பாராட்டப்படுகிறது.

பல்கலைக்கழகத் துறைகளில் நியமனத்திற்காக தற்காலிக அல்லது அடோக் அடிப்படையில் ஏற்கனவே கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பிஎச்டி (PHD) பட்டத்தை தளர்த்துமாறு பல்கலைக்கழக மானியக்குழுவை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். சில பாடங்களில் எஸ்சி, எஸ்டி வின்ணப்பதாரர்கள் யாரும் பிஎச்டி படித்திருப்பதில்லை. இந்த சூழ்நிலையில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த யாரும்  விண்ணப்பிக்கவில்லை என்பதால் இட ஒதுக்கீடு முறைப்படி நியமனம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், பல துறைகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லாமல் அந்த பணியிடங்கள் காலியாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Also Read | சாவர்க்கர் நீக்கம், பெரியார் சேர்ப்பு: கன்னூர் பல்கலையில் புதிய பாடத்திட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

https://www.facebook.com/ZeeHindustanTamil

https://twitter.com/ZHindustanTamil

Trending News