64 ஆண்டு IIT Bombay முடிவு கல்வித்துறையில் ஒரு மைல் கல்

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பம்பாய் (IIT Bombay) ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2020, 04:41 PM IST
  • IIT Bombay ஒரு வரலாற்று முடிவை எடுத்துள்ளது
  • இந்த ஆண்டு வகுப்பறையில் எந்த பாடமும் நடத்தப்படாது
  • 62 ஆண்டுகளில் முதல் முறையாக முழு செமஸ்டரும் ஆன்லைன் மூலமாக நடைபெறும்
  • மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், படிப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது
64 ஆண்டு IIT Bombay முடிவு கல்வித்துறையில் ஒரு மைல் கல் title=

புதுடெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பம்பாய் (IIT Bombay) ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. இப்படி ஒரு முக்கிய முடிவை எடுத்த நாட்டின் முதல் உயர்கல்வி கல்வி நிறுவனமாக IIT Bombay மாறியுள்ளது. முழு கல்வி அமர்வையும் ஆன்லைனில் தொடங்க உள்ளதாக, ஐ.ஐ.டி இயக்குனர் பேஸ்புக் பதிவுகள் அறிவித்தார். இது தற்போது இந்த கல்வியாண்டில் சேரக்கூடிய மாணவர்கள் மற்றும் ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும்.

62 ஆண்டுகளில் முதல் முறையாக முழு செமஸ்டரும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்பதால், மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், படிப்பிற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ALSO READ | Google Android டெவலப்பர் சேலஞ்ச்சில் வெற்றி பெற்ற 3 இந்தியர்கள்

அடுத்த செமஸ்டர் வரை மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை நடத்துவேன் என்று ஐ.ஐ.டி பாம்பே இயக்குனர் சுபாஷீஷ் செளத்ரி தெரிவித்தார். இது  மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, ஐ.ஐ.டி பாம்பே கல்வி நிறுவனத்தின் கற்பிக்கும் முறை மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த முடிவுகளால், இனி வகுப்புகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படாது.  மாணவர்களின் கல்வியில் சுணக்கம் ஏற்படாது என்று தெளிவுபடுத்தினார். எனவே ஆன்லைன் வகுப்புகளின் கட்டமைப்பை தயார் செய்து வருவதாகவும், விரைவில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் குறித்த தகவல்கள் பரிமாறப்படும் என்றும் ஐ.ஐ.டி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ALSO READ | பாலியல் துணையின் ஆயுள் குறைவுக்கு ஆண்கள் காரணமா?

62 ஆண்டுகளில் இதுவே முதல் முறை

ஐ.ஐ.டி பம்பாயின் 62 ஆண்டு வரலாற்றில் இது முதல் தடவையாகும்,  மாணவர்கள் இல்லாமல் வகுப்புகள் தொடங்கும். நாட்டின் பிற ஐ.ஐ.டி.களும் இந்த முறையை பின்பற்றலாம் என்று நம்பப்படுகிறது. ஐ.ஐ.டி பாம்பே கடந்த காலங்களில் பல முறை  ஆன்லைன் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது இந்த முன்முயற்சிக்கு பக்கபலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Trending News