ஜனநாயகக் கூட்டணி நீண்ட நாட்களுக்கு நிலைக்காது -ராகுல்!

எதிர்கட்சிகள் ஒன்றினைந்தால் வரும் 2019 தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தோற்பார் என காங்கிரஸ் தலைவர ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

Last Updated : Apr 8, 2018, 09:40 PM IST
ஜனநாயகக் கூட்டணி நீண்ட நாட்களுக்கு நிலைக்காது -ராகுல்! title=

எதிர்கட்சிகள் ஒன்றினைந்தால் வரும் 2019 தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தோற்பார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 12-ஆம் நாள் நடைபெறவுள்ளது. இதனையடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பெங்களூருவில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்ததாவது.. 

"தற்போது நிலவும் சூழலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. எனவே கூட்டணி நீண்ட நாட்களுக்கு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. நாடுமுழுவதும் பாஜக ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதினை மக்கள் உணர்ந்து வருகின்றனர். எனவே வரும் பொதுத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெறுவது கடினம் தான்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வரும் 2019 பொதுத்தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றினைந்தால் வாரணாசி தொகுதில் கூட பிரதமர் மோடி தோல்வியை தழுவுவார் என குறிப்பிட்டுள்ளார்!

Trending News