ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

Last Updated : Jan 8, 2017, 12:17 PM IST
ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது title=

வைகுண்ட ஏகாதசி விழா வையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடந்து வருகிறது.

இதில் மிகவும் பிரசித்தி பெற்றது வைகுண்ட ஏகாதசி பெருவிழா. இந்த ஆண்டுக்கான விழா கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி தொடங்கியது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. 

சொர்க்கவாசல் இன்று அதிகாலை முதல் இரவு வரை திறந்து இருக்கும். 

அதேபோல், இன்று டெல்லி ஆர்.கே.புறம் பாலாஜி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபற்றது. 

ரெங்கநாதரை தரிசிக்க பக்த்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

Trending News