இன்று கிருஷ்ண ஜெயந்தி: கண்ணனை வரவேற்போம்!

Last Updated : Aug 14, 2017, 10:37 AM IST
இன்று கிருஷ்ண ஜெயந்தி: கண்ணனை வரவேற்போம்! title=

ஸ்ரீகிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். 
தென்னகத்தில் `கோகுலாஷ்டமி’ என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி’ என்றும் அழைக்கப்படுகிறது. 

பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர் - தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார்.

மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 - 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 - 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது. தனது ஏழாவது வயதில் கம்சனை வதம் செய்து பெற்றோரை விடுவித்தான் கிருஷ்ணன்.

கிருஷ்ண ஜெயந்தி எப்படி கொண்டாடுவார்கள்:-

அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் “உறியடி” திருவிழா நடைபெறும். 

வழிபாட்டு முறை:

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் மாலை நேரத்தில் கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்றி  வார்கள்.

தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, போன்ற பிரசாதங்களை அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ண பகவானுக்கு நெய்வீதியம் செய்வார்கள்.

கண்ணன் பிறந்த மதுராவில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபட்டு ஏராளமான பலன்களை பெற்றிடுவோம்.

Trending News