அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஜலேசரில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் ராமர் கோவில் மணியை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஆம், ஆதாரங்களின் படி ஏற்கனவே ஒரு மணி தயாரிக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமர் கோவில் மணி தயாரிக்கும் இஸ்லாமிய நண்பர்கள் தெரிவிக்கையில்., கோவில் மணி தயாரிப்பதற்கான பணி ஆணை வந்தது. கோரிக்கையினை ஏற்று மணி தயாரிக்கும் பணியும் துவங்கப்பட்டது. தற்போது கோவில் மணியும் தயாரிக்கப்பட்டு வருகிறது. மணியினை தயாரிக்க 10 லட்சம் வரை செலவிடப்பட்டு வருகிறது.
அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கான வழியைத் தெளிவுபடுத்திய பின்னர், ஜலேசரில் மணி தயாரிக்கும் செயல்முறை அதிகரித்துள்ளது, மணி தயாரிக்கும் பணி மும்மரமாக நடைப்பெற்று வருகிறது.
கிடைத்த தகவல்களின்படி, "ராம் கோவிலுக்கு, நாட்டின் அனைத்து கோயில்களிலிருந்தும் ஒரு பெறப்பட்ட உலோகங்களை கொண்டு கனமான மணி தயாரிக்கப்பட்டு வருகிறது" என்று மணி தயாரிக்கும் விகாஸ் மிட்டல் தெரிவித்துள்ளார். இதன் எடை 2100 கிலோவுக்கு அருகில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பித்தளை தவிர, பிற உலோகங்களும் தயாரிக்கப்படும் மணிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மணியின் கட்டுமானத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த மணியின் பெரும் தேவையை கருத்தில் கொண்டு, கைவினைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தாயரிக்கப்படும் மணி ஆறு அடி உயரமும் அகலம் ஐந்து அடி வரை இருக்கும்.'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அயோத்தி கோயில் கட்டுமானம் குறித்து வந்த செய்திகளின் படி, 4 முதல் 5 ஆண்டுகளில் இந்த கோயில் கட்டப்படும் என்றும் கோவிலில் 212 தூண்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.