இந்தியன் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் பணம் பெறும் வசதியை ஏற்படுத்தி தரும்படி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வங்கிகள், ஏடிஎம் நெட்வொர்க்குகள் மற்றும் டபுள்யூஎல்ஏஓக்கள் போன்றவை அதன் ஏடிஎம்களில் ஐசிசிடபுள்யூ விருப்பத்தை வழங்க வேண்டும். யூபிஐ செயல்முறையை அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் செயல்படுத்த என்டிபிஐ அறிவுறுத்தியுள்ளது, டிரான்ஸாக்ஷன்களில் வாடிக்கையாளர்களின் அங்கீகாரத்திற்கு யூபிஐ பயன்படுகிறது. ஐசிசி டபுள்யூ டிரான்ஸாக்ஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டதை தவிர வேறு எந்த கட்டணமும் விதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | NPS vs PPF: அதிக வருமானம் அளிக்கும் திட்டம் எது? நிபுணர்களின் கருத்து இதோ
தற்போது ஏடிஎம்களில் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில வங்கிகள் மட்டுமே வழங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற நிதிக்கொள்கை மறு ஆய்வு கூட்டத்தில் யூபிஐ வசதியை பயன்படுத்தி அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் கார்டுகள் இல்லாமல் டிரான்ஸாக்ஷன் செய்யும் வசதி வழங்கப்படும் என்று ஆர்பிஐ கூறியது. இதுகுறித்த அறிவிப்பில், சில வங்கிகள் மட்டுமே அதன் வாடிக்கையாளர்களுக்கு கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வழங்கி வருகிறது, இதேபோன்று அனைத்து வங்கிகளும் யூபிஐ மூலம் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இந்த செயல்முறையின் மூலம் ஸ்கிம்மிங், கார்டு குளோனிங், டிவைஸ் டேம்பரிங் போன்ற மோசடிகள் குறையும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
ஹெச்டிஎப்சி வங்கியின் தளத்தின்படி, கார்டுகள் இல்லாமல் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ரூ.10,000 வரை டிரான்ஸாக்ஷன் செய்துகொள்ளலாம், மேலும் மாதத்திற்கு ரூ.25,000 வரை டிரான்ஸாக்ஷன் செய்து கொள்ளலாம். ஐசிஐசிஐ வங்கியை பொறுத்தவரை கார்டுகள் இல்ல பரிவர்த்தனை மூலம் வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து இந்திய முழுவதும் செல்லுபடியாகும் மொபைல் நம்பருக்கு பணத்தை டிரான்ஸாக்ஷன் செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | EPFO முக்கிய செய்தி: இதை செய்யவில்லை என்றால் கணக்கு இருப்பை தெரிந்துகொள்ள முடியாது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR