Gold Loan Tips: குறைந்த வட்டியில் நகைக்கடன் கொடுக்கும் ‘சில’ வங்கிகள்!

Gold Loan Tips: கடினமான காலங்களில் நகைக்கடன் சிறந்த வகையில் கைக் கொடுக்கும். தங்கம் என்பது அலங்காரத்திற்கான ஒரு ஆபரணம் மட்டுமல்ல, நிச்சயமற்ற தன்மையின்போது அவசர தேவைக்கு உதவும் மிக முக்கியமான நிதி ஆதாரங்களில் ஒன்று. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 11, 2024, 03:50 PM IST
  • அவசர தேவைக்கு உதவும் மிக முக்கியமான நிதி ஆதாரங்களில் ஒன்று நகைக்கடன்.
  • HDFC என்பது மிகப்பெரிய தனியார் வங்கியாகும்.
  • முக்கிய வங்கிகளில் நகைக் கடன் வட்டி விகிதங்கள்.
Gold Loan Tips: குறைந்த வட்டியில் நகைக்கடன் கொடுக்கும் ‘சில’ வங்கிகள்! title=

Banks That Offer Cheapest Gold Loan: கடினமான காலங்களில் நகைக்கடன் சிறந்த வகையில் கைக் கொடுக்கும். தங்கம் என்பது அலங்காரத்திற்கான ஒரு ஆபரணம் மட்டுமல்ல, நிச்சயமற்ற தன்மையின்போது அவசர தேவைக்கு உதவும் மிக முக்கியமான நிதி ஆதாரங்களில் ஒன்று. அவசரகாலத்தில், வீட்டில் வைத்திருக்கும் தங்கத்தைப் பயன்படுத்தி தங்கக் கடன் வாங்கலாம். தங்கத்தின் மீதான கடனை நீங்கள் எளிதாகவும் குறைந்த கட்டணத்திலும் பெறலாம். ஏனெனில், இதில் வங்கி தனது பணத்தை இழக்கும் பயம் இல்லை. ஆனால், தங்கக் கடனை எங்கே எடுப்பது என்பது தான் கேள்வி. தங்க நகைக் கடன் கொடுக்கும் முக்கியமான 5 வங்கிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

தங்க நகைக் கடன் கொடுக்கும் முக்கிய 5 வங்கிகள் மற்றும் அதன் வட்டி விகிதங்கள்

1. HDFC வங்கி

HDFC என்பது மிகப்பெரிய தனியார் வங்கியாகும்.  தனியார் வங்கியில் தங்கக் கடன் வாங்கினால், 8.50 சதவீதம் முதல் 17.30 சதவீதம் வரை வட்டி கட்ட வேண்டியிருக்கும். இந்த வட்டி விகிதம் வெவ்வேறு காலகட்டங்களுக்கும் வெவ்வேறு தொகைகளுக்கும் வித்தியாசமாக இருக்கலாம். அதே நேரத்தில், பெறப்பட்ட மொத்த கடனில் 1 சதவீதத்தை செயலாக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

2. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

தங்கக் கடனுக்காக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவை அணுகினால், 8.45 சதவீதம் முதல் 8.55 சதவீதம் வரை வட்டி கட்ட வேண்டும். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 லட்சம் வரை தங்கக் கடன் வாங்கலாம். அதே நேரத்தில், மொத்தக் கடன் தொகையில் 0.50 சதவீதத்தை செயலாக்கக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இது ரூ. 250 முதல் ரூ. 5000 வரை இருக்கலாம். தற்போது, 2024, மார்ச் 31 வரை வாங்கிய நகைக் கடனுக்கான செயலாக்கக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. 

மேலும் படிக்க | இந்த வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் புதிய உத்தரவு! உங்கள் வங்கியின் பெயர் உள்ளதா?

3. UCO வங்கி

நீங்கள் UCO வங்கியில் நகைக் கடன் வாங்கினால், 8.60 சதவிகிதம் முதல் 9.40 சதவிகிதம் வரை வட்டியும், 250 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையிலான செயலாக்கக் கட்டணமும் செலுத்த வேண்டும். உங்கள் செயலாக்கக் கட்டணம் வெவ்வேறு அளவுகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.

4. இந்தியன் வங்கி

நகைக் கடனுக்காக இந்தியன் வங்கியையும் அணுகலாம். இங்கு கடனுக்கு 8.65 சதவீதம் முதல் 10.40 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டியிருக்கும். வங்கியின் இணையதளத்தின்படி, நீங்கள் நகைக் கடன் அல்லது தங்க நகைகளுக்கு எதிரான OD கணக்கு ஆகியவற்றிற்கு எந்த செயலாக்கக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.

5. பாரத ஸ்டேட் வங்கி

நீங்கள் எஸ்பிஐயில் நகைக் கடன் வாங்கினால், ஆரம்ப வட்டி விகிதமாக 8.70 சதவீதம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை தங்கக் கடன் வாங்கலாம். ரூ. 3 லட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ள கடன்களுக்கு செயலாக்கக் கட்டணம் எதுவும் இருக்காது. வெவ்வேறு தொகைகள் மற்றும் கடன்களுக்கு வெவ்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.

தங்கக் கடன் பெறுவதற்கான காரணங்கள்

நீங்கள் பல சூழ்நிலைகளில் தங்கக் கடன் வாங்கலாம். அதற்கான சில காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. கடுமையான நோய்க்கான சிகிச்சை 

குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு சிகிச்சை அளிக்க பெரும் தொகை செலவிடும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலைகளுக்கு முன்கூட்டியே நம்மை தயார்படுத்துவது புத்திசாலித்தனம். ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து, சில அவசரகால நிதியை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இதெல்லாம் மீறி, நிலைமையை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் போது, வீட்டில் வைத்திருக்கும் தங்க நகைகளின் மீது கடன் வாங்குவதைத் தேர்வு செய்து, மருத்துவமனைச் செலவுகளைச் சமாளிக்கலாம். 

2. திருமணச் செலவுகளைச் சமாளிக்க கடன்

திருமணத்திற்காக நிறைய பணம் செலவிடப்படுகிறது. பல சமயங்களில் மற்றவர்களிடம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இந்நிலையில் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்தை பயன்படுத்தலாம். மற்ற கடன்களுடன் ஒப்பிடுகையில், தங்கக் கடன் செயல்முறை சற்று எளிதானது. இது குறைவான தொந்தரவு மற்றும் குறைவான காகித வேலைகளுடன் எளிதாகக் கிடைக்கிறது.

3.  உயர் கல்விக்காக பெறும் கடன்

உங்கள் மகன்/மகள் அல்லது நீங்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்று படிக்க வைக்கவோ அல்லது உள்நாட்டிலேயே படிக்க வைக்கவோ, சில காரணங்களால் கல்விக் கடனைப் பெற முடியவில்லை என்றால், இரண்டாவது விருப்பமாக தங்கக் கடனைத் தேர்வு செய்யலாம்.

தங்கக் கடன் வாங்குவதால் உள்ள நன்மைகள் என்ன?

மற்ற கடன்களுடன் ஒப்பிடும்போது, தங்கக் கடனுக்கான செயல்முறை மிகவும் எளிதானது. உங்கள் தங்கத்தின் மதிப்புக்கு ஏற்ப கடன் தொகை உங்களுக்கு வழங்கப்படுவதால் கிரெடிட் ஸ்கோர் போன்றவை அதிகம் முக்கியமில்லை.
அவசர காலங்களில், உங்களுக்கு உடனடியாக பணம் தேவைப்படுகிறது, அத்தகைய சூழ்நிலையில் தங்கக் கடன் உங்களுக்கு உதவியாக இருக்கும், ஏனெனில் அது குறுகிய நேரத்தில் கூட கிடைக்கும்.

தனிநபர் கடன், சொத்துக் கடன், கார்ப்பரேட் கடன் போன்ற அடமானம் அல்லது கடன்களுடன் ஒப்பிடும்போது தங்கக் கடன் வட்டி குறைவானது.

தங்கக் கடனாக இருந்தால், கடனாளிக்கு கடனைத் திருப்பிச் செலுத்த நெகிழ்வான வகையில் கடனை  திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் வழங்கப்படுகின்றன.

நகைக்கடன் வாங்கும் போது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்

தங்கக் கடன் பெற, 18 வயது முதல் 75 வயதுக்குள் இருக்க வேண்டும். அடமானமாக வைக்கப்படும் தங்கத்தின் தூய்மை 18 காரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். தங்கக் கடன் விஷயத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கக் கடனை உங்களால் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால், உங்கள் அடமானத் தங்கத்தை விற்க, கடன் வழங்கும் நிறுவனத்திற்கு உரிமை உண்டு. இது தவிர, தங்கத்தின் விலை குறைந்தால், கூடுதல் தங்கத்தை அடகு வைக்குமாறு கடன் வழங்கும் வங்கி அல்லது நிறுவனம் உங்களிடம் கேட்கலாம்.

மேலும் படிக்க | SIP: மாதம் ரூ. 5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலா..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News