Income Tax Rules: இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை (Budget 2024) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இந்த தருணத்தில் நாம் சென்ற ஆண்டு பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்களை நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். 2023 மத்திய பட்ஜெட்டில் (Union Budget) புதிய வருமான வரி விதிகளின் தொகுப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. தனிநபர் வரி விதிப்பில் (Personal Taxation) செய்யப்பட்ட முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று, புதிய வருமான வரிமுறையை இயல்புநிலை வரிமுறையாக குறிப்பிட்டது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sirtharaman) தனது பட்ஜெட் உரையின் போது, புதிய வருமான வரிமுறையின் கீழ் உள்ள திட்டங்கள் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை அதிக அளவில் தக்கவைக்க அனுமதித்து அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று வலியுறுத்தினார். இந்த அணுகுமுறை வரி செலுத்துவோரிடம் (taxpayers) பொறுப்பை கொடுக்கிறது. அரசாங்க சலுகைகளை நம்பாமல், தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்வது என்பதைத் தேர்வு செய்ய அவர்களுக்கு இந்த முறை அதிகாரம் அளிக்கிறது.
திருத்தப்பட்ட வரி அடுக்கு (Revised Tax Slab):
புதிய வரி முறையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, இந்த கட்டமைப்பிற்குள் வருமான வரி அடுக்குகளில் (Income Tax Slabs) மாற்றங்கள் செய்யப்பட்டன.
- 3 லட்சம் வரை வருமான வரி (Income Tax) இல்லை
- ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5%
- 6 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10%
- 9 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15%
- 12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20%
- 15 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்திற்கு 30%
புதிய வரி விதிப்பில் வரி விலக்கு வரம்பு (New Tax Regime Tax Exemption):
புதிய வரி விதிப்பு முறையில் வரி விலக்கு (Tax Exemption) வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய வரி முறையைப் பின்பற்றுபவர்கள் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு பெறுவார்கள். இது இதுவரை ரூ.2.5 லட்சம் வரை மட்டுமே கிடைத்தது. அதாவது கூடுதலாக ரூ.50 ஆயிரத்திற்கு இந்த ஆண்டு முதல் வரிவிலக்கு கிடைக்கும்.
புதிய வரி முறை இயல்புநிலையாகிறது (Default New Tax Regime):
புதிய வரி விதிப்பு டீஃபால்ட் அதாவது இயல்புநிலை வரிமுறையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்யும் போது, அது இயல்பாகவே புதிய வரி முறையைக் காட்டும். நீங்கள் பழைய வரி முறையில் தாக்கல் செய்ய விரும்பினால், நீங்கள் அதை கைமுறையாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
வரிச்சலுகை அதிகரிப்பு (Tax Rebate Increased):
வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rules) 87ஏ பிரிவின் கீழ், புதிய வரி விதிப்பில் தள்ளுபடி வரம்பு ரூ.12,500ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நிலையான விலக்கு ரூ.50 ஆயிரம் (Standard deduction of Rs 50 thousand):
கடந்த ஆண்டு வரை வருமான வரி செலுத்தும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பழைய வரி முறையில் (Old Tax Regime) ரூ.50 ஆயிரம் மட்டுமே வரி விலக்கு பெற்று வந்தனர். இந்த ஆண்டு முதல், புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.50 ஆயிரம் நிலையான விலக்கும் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ