CIBIL Score: நாம் பல வித தேவைகளுக்காக கடன் வாங்குகிறோம். பெரும்பாலும் வங்கிகளில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அப்படி வங்கிகளில் கடன் வாங்கும்போது, உங்கள் சிபில் மதிப்பெண் (CIBIL Score) நன்றாக இருந்தால், உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. இருப்பினும், ஒரு வங்கி ஒரு நபருக்கு தனிநபர் கடனை வழங்கும்போது, அது அவரது CIBIL மதிப்பெண்ணை மட்டும் பார்ப்பதில்லை. இந்த வேளையில் மூன்று வகையான விகிதங்கள் சரிபார்க்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நீங்கள் கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியுமா இல்லையா என்பதை வங்கி உறுதி செய்துகொள்கிறது.
CIBIL Score -ஐத் தவிர, கடன் கொடுக்க வங்கி செக் செய்யும் பிற 2 விதங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Debt-to-Income (DTI) Ratio
ஒரு நபருக்கு கடன் கொடுப்பதற்கு முன்னர், வங்கி கண்டிப்பாக Debt-to-Income (DTI) Ratio எனப்படும் கடன் வருமானம் விகிதத்தை செக் செய்கிறது. இந்த விகிதம் மாதாந்திர கடன் செலுத்துதல் மற்றும் உங்கள் மொத்த சம்பளத்தை ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது. டிடிஐ விகிதம் குறைவாக இருந்தால், கடனைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த விகிதத்தின் மூலம், நீங்கள் ஏற்கனவே எத்தனை கடன்களை வைத்திருக்கிறீர்கள், உங்கள் கையில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை வங்கி தெரிந்துகொள்கிறது.
EMI/NMI Ratio
EMI/NMI விகிதத்தின் மூலம், உங்களின் நிகர மாதாந்திர வருவாயில் எவ்வளவு உங்கள் தாற்போதைய கடனுக்கான EMI மற்றும் உத்தேச கடனுக்கான EMI-இல் செலவிடப்படும் என்பதை வங்கி கணக்கிடுகிறது. உங்கள் இஎம்ஐ/என்எம்ஐ 50-55 சதவிகிதம் வரை இருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்த விகிதம் அதை விட அதிகமாக இருந்தால், வங்கிகள் உங்களுக்குக் கடனைக் கொடுக்கத் தயக்கம் காட்டலாம். விகிதம் அதிகமாக இருந்து, வங்கி உங்களுக்கு கடன் கொடுக்க முன்வந்தால், அந்த சர்ந்தர்ப்பங்களில் பெரும்பாலும் உங்களிடம் அதிக வடி வசூலிக்கப்படலாம்.
Loan-to-Value Ratio (LTV)
வீட்டுக் கடன் அளிக்கப்படும் போது குறிப்பாக இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. இந்த விகிதத்தின் உதவியுடன் ஆபத்தைப் புரிந்துகொள்வது எளிதாகிறது. உங்கள் சொத்து அல்லது பிணையத்துடன் ஒப்பிடுகையில் உங்கள் கடனின் மதிப்பி எவ்வளவு என்பதை LTV விகிதம் காட்டுகிறது. இந்த விகிதம் கடனைப் பாதுகாக்க உதவுகிறது. கடன் வழங்கும் வங்கி தேவையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உருவாக்க இந்த விகிதத்தை பயன்படுத்துகிறது.
மேலும் படிக்க | தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: கிராஜுவிட்டியை உயர்த்தி அரசு உத்தரவு
CIBIL Score என்றால் என்ன?
- CIBIL Score என்பது ஒரு மூன்று இலக்க எண்.
- இதன் வரம்பு 300 முதல் 900 மதிப்பெண்கள் வரை உள்ளது.
- இந்த எண் ஒரு நபரின் கடன் வாங்குவதற்கான தகுதியை காட்டுகிறது.
- கடனுக்கு விண்ணப்பித்தவரின் பழைய கடன்கள், கிரெடிட் கார்டு பில்கள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த எண் தீர்மானிக்கப்படுகிறது.
- கடன்கள் மற்றும் கார்டு பில்களை ஒருவர் சரியான வழியில், நேரத்தில் செலுத்திக்கொண்டு இருந்தால், அவரது சிபில் ஸ்கோர் சிறப்பாக இருக்கும்.
- அதேசமயம், இந்த கடன்கள் மற்றும் கட்டணங்களை சரியான நேரத்தில் கட்டவில்லை என்றால், CIBIL ஸ்கோர் மோசமாகிவிடும்.
CIBIL Score நன்றாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
உங்கள் CIBIL மதிப்பெண் நன்றாக இருந்தால் அது பல நன்மைகளை அளிக்கும். அனைத்து வங்கிகளும் கடனை வழங்குவதற்கு CIBIL மதிப்பெண்ணை செக் செய்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால், நீங்கள் கடனை எளிதாகவும் மலிவாகவும் பெறலாம். சில சமயங்களில் ப்ரீ-அப்ரூவ்ட் கடன் சலுகைகளைப் பெறலாம். மேலும் உடனடி கடன் வசதியையும் பெறலாம், அதாவது சில நிமிடங்களில் உங்கள் கணக்கில் பணம் வந்துவிடும்.
CIBIL Score நன்றாக இல்லை என்றால் ஏற்படும் பாதகம் என்ன?
CIBIL ஸ்கோர் சரியாக இல்லை என்றால், இல இழப்புகளை தாங்கிக்கொள்ள வேண்டும். வங்கி தொடர்பான அனைத்து பணிகளிலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம். CIBIL ஸ்கோர் மோசமாக இருந்தால்,
- கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
- அதிக வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும்.
- அதிக பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
- வீட்டு-கார் கடனைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள்.
- கடன் கிடைப்பதில் தாமதமும் ஏற்படலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ