ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 86,449 கோடி என மத்திய அரசு தகவல்

2020 ஆகஸ்ட் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி (GST Revenue Collected) வருவாய் 86,449 கோடி ரூபாய் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2020, 06:52 PM IST
ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 86,449 கோடி என மத்திய அரசு தகவல் title=

GST Collections: 2020 ஆகஸ்ட் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி (GST Revenue Collected) வருவாய் 86,449 கோடி ரூபாய் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சிஜிஎஸ்டி (CGST) ரூ. 15,906 கோடி, எஸ்ஜிஎஸ்டி (SGST ) ரூ. 21,064 கோடி ஆகும். ஐஜிஎஸ்டி வசூல் (IGST) ரூ. 42,264 கோடி (பொருட்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட, ரூ. 19,179 கோடி உட்பட) மற்றும் செஸ் (Cess) ரூ. 7,215 கோடி (பொருட்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட ரூ. 673 கோடி உட்பட) வசூலாகியுள்ளது. 

ஐஜிஎஸ்டியிலிருந்து (IGST) சிஜிஎஸ்டிக்கு, ரூ. 18,216 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு, ரூ. 6 ​​14,650 கோடியும் வழக்கமான தீர்வாக அரசாங்கம் செலுத்தியுள்ளது. 2020 ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமான செலுத்தப்படும் தொகைக்கு பிறகு மத்திய அரசும் மாநில அரசுகளும் சம்பாதித்த மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ. 34,122 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு, 7 35,714 கோடியும் ஆகும்.

ALSO READ | 2020-21 ஆம் ஆண்டின் Q1-ல் GDP 23.9% சுருக்கம்; மோசமடையும் நாட்டின் நிதி நிலைமை

இந்த ஆண்டின் வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயில் 88 சதவீதமாகவும். இந்த மாதத்தில், பொருட்களின் இறக்குமதியின் வருவாய் 77% ஆகவும், உள்நாட்டு பரிவர்த்தனையின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த மூலங்களிலிருந்து கிடைத்த வருவாயில் 92% ஆகவும் இருந்தது.

GST collection in August at Rs 86449 crore
Photo: PIB

 நடப்பு நிதியாண்டில் 2.35 லட்சம் கோடி ஜிஎஸ்டி பற்றாக்குறை இருப்பதால், மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியளிப்பது தொடர்பாக பாஜக அல்லாத ஆளும் மாநிலங்கள் முரண்படுகின்றன. இதில், மத்திய அரசின் கணக்கீட்டின்படி, சுமார் ரூ. 97,000 கோடி ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாகவும், மீதமுள்ள ரூ. 1.38 லட்சம் கோடி மாநிலங்களின் வருவாயில் உள்ளது.

Trending News