New Wage Code: சம்பளம் மற்றும் வேலை நேரங்களில் வருகிறது மாற்றம்?

ஊழியர்களின் அடிப்படை சம்பளம், மொத்த சம்பளத்திலிருந்து 50% இருக்க வேண்டும் என்று புதிய ஊதிய குறியீடு தெரிவித்துள்ளதால், ஊழியர்கள் பெரும் சம்பளத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது  

Written by - RK Spark | Last Updated : Aug 9, 2022, 11:01 AM IST
  • பல மாநிலங்கள் புதிய ஊதிய குறியீட்டை கொண்டு வந்துள்ளன.
  • 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் புதிய ஊதிய விதிகளை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனால் ஊழியர்களின் வேலை நேரத்திலும், சம்பளத்திலும் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
New Wage Code: சம்பளம் மற்றும் வேலை நேரங்களில் வருகிறது மாற்றம்?  title=

ஜூலை-1 முதல் புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, பல மாநிலங்கள் புதிய  ஊதிய குறியீட்டை கொண்டு வந்துள்ளன.  புதிய சட்டங்களை பாராளுமன்றம் வாயிலாக அரசாங்கம் கொண்டு வந்தபோதிலும் இன்னும் சில மாநிலங்கள் இந்த புதிய  ஊதிய குறியீட்டை ஏற்க மறுக்கின்றன, இதனை அனைத்து மாநிலங்களும் அங்கீகரித்தால் தான் செயல்படுத்தமுடியும் என்பதற்காக சட்டத்தை உடனே அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  இதுவரை 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் புதிய ஊதிய விதிகளை வெளியிட்டுள்ளதாக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் ஊழியர்களின் வேலை நேரத்திலும், சம்பளத்திலும் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்திலிருந்து 50% இருக்க வேண்டும் என்று புதிய ஊதிய குறியீடு தெரிவித்துள்ளதால், ஊழியர்கள் பெரும் சம்பளத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.  2019ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தொழிலாளர் குறியீடு 29 தொழிலாளர் சட்டங்களை மாற்றுகிறது.  ஒரு ஊழியர் சேவையிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது பணியிலிருந்து விலகினாலோ அல்லது நிறுவனம் மூடப்பட்டதால், வேலையில்லாமல் இருந்தாலோ அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் இரண்டு வேலை நாட்களுக்குள் வழங்கப்படும் என்று புதிய ஊதிய குறியீடு கூறுகிறது.  

மேலும் படிக்க | 8th Pay Commission: 8-வது ஊதியக் குழு இல்லை! மத்திய அரசின் பதில்!

மேலும் புதிய ஊதிய குறியீட்டின்படி, ஊழியர்களின் வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றன, அதேசமயம் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒருநாள் விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  இப்போது வேலை நேரம் அதிகரிக்குமாயின் வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்யும் ஊழியர்கள் இனிமேல் 4 நாட்களுக்கு வேலை செய்வார்கள், அவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு விடுப்பு வழங்கப்படும்.  ஒரு வாரத்தில் ஒரு ஊழியர் தொடர்ந்த 8 மணி நேரத்திற்கும் மேல் விலை செய்யும் பட்சத்தில் முதலாளி கூடுதல் நேர கட்டணம் அளிக்க வேண்டும்.  புதிய ஊதிய குறியீட்டால் ஊழியர்களின் சம்பளத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களுக்கான ஓய்வூதிய கார்பஸ் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | PPF விதிகள் மாற்றம்: இனி எப்போது வேண்டுமானாலும் முழு பணத்தையும் திரும்பப் பெறலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News