NPS இன் புதிய விதிகள்: முறையான மொத்தத் தொகை திரும்பப் பெறுவதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டுமா? என்பது தொடர்பான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. அக்டோபர் 27 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கையில், முறையான மொத்த தொகை திரும்பப் பெறுதல் (SLW) வசதி மூலம் மொத்த தொகையை படிப்படியாக திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை PFRDA வழங்க முன்மொழிந்தது.
அந்த சுற்றறிக்கையின்படி, சந்தாதாரர்கள் தங்கள் ஓய்வூதியத் தொகையில் 60 சதவிகிதம் வரை, SLW மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒரு முறை 75 வயது வரை அவர்கள் சாதாரணமாக வெளியேறும் விருப்பத் தெரிவு உண்டு.
தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, NPS சந்தாதாரர்கள் 60 வயதுக்குப் பிறகு வருடாந்திரத் தொகையைப் பெறுவதையும், எந்தவொரு கூட்டுத்தொகையையும் திரும்பப் பெறுவதையும் 75 வயது வரை ஒத்திவைக்கலாம். மொத்தத் தொகையை ஒரு தவணையாக திரும்பப் பெறலாம் அல்லது ஆண்டு அடிப்படையில் திரும்பப் பெறலாம். ஆண்டுதோறும் திரும்பப் பெறப்பட்டால், சந்தாதாரர் ஒவ்வொரு முறையும் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
தற்போது ஆண்டுத்தொகையை வாங்கும்போது சந்தாதாரர் பெறும் ஓய்வூதியம், சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட SLW பொறிமுறையைப் பயன்படுத்தி திரும்பப் பெறுவதன் மூலம் இலகுவாக்கப்பட்டுள்ளது. இந்த விருப்பம் ஆண்டுத்தொகை வாங்கிய பிறகு மொத்த NPS கார்பஸ்களில் மட்டுமே கிடைக்கும், மேலும் இது ஓய்வுபெறும் நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படலாம்.
SLW விருப்பம் சந்தாதாரர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது?
SLW விருப்பம், இந்த செயல்முறையை தானாகவே இயங்க வைக்கும். ஒவ்வொரு முறையும் கோரிக்கை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. SLW இன் காலமுறைத் தேர்வை தானியக்கமாக்குவது நெகிழ்வுத்தன்மை மற்றும் பணப்புழக்கத்தைச் சேர்ப்பதன் மூலம் ஓய்வூதிய பலன்களை அதிகப்படுத்தும்.
சந்தாதாரர்கள் தங்கள் முதலீட்டு விருப்பத்தின்படி நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்ணில் (PRAN) முதலீடு செய்து திரும்பப் பெறாத பணத்திற்கான சந்தை-இணைக்கப்பட்ட முதலீட்டு ஆதாயங்களிலிருந்தும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, SLW (systematic lump Sum withdrawal) வசதி ஒரு முறை மொத்தமாக திரும்பப் பெறுவதோடு தொடர்புடைய மறு முதலீட்டின் அபாயத்தைக் குறைக்கும்.
எவ்வாறாயினும், இந்த SLW இன் காலத்திற்கு, சந்தாதாரர்கள் பங்களிக்க முடியாது. NPS இன் கீழ், சந்தாதாரருக்கு அடுக்கு I மற்றும் அடுக்கு II இரண்டு வகையான கணக்குகள் கிடைக்கின்றன.
அடுக்கு I
அடுக்கு I கணக்கு என்பது ஒவ்வொரு சந்தாதாரரின் தனிப்பட்ட கணக்கில் அரசாங்கம் மற்றும் சந்தாதாரர் ஆகிய இருவராலும் பணம் டெபாசிட் செய்யப்படும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும், சந்தாதாரர் அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் DA ஆகியவற்றில் 10 சதவீதத்தை அவர்களது அடுக்கு-I கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும், இது முதலாளியின் பங்களிப்புடன் பொருந்தும்.
அவர்கள் பணியில் இருக்கும்போது, வழக்கமான என்பிஎஸ் பங்களிப்புகள் மற்றும் திரட்டப்பட்ட தொகைகள் அவர்களின் PRAN இல் காட்டப்படும், மேலும் அவர்கள் ஓய்வுபெறும் போது அவர்களின் ஓய்வூதியத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும்.
அடுக்கு II
அடுக்கு II கணக்கு பயனர்கள் தானாக முன்வந்து பணத்தைச் சேமிக்க அனுமதிக்கிறது, அவர்கள் விரும்பும் போதெல்லாம் அதை வெளியே எடுக்கும் சுதந்திரம் இந்த வகை கணக்கில் உண்டு. அடுக்கு II கணக்கைத் தொடங்க, உங்களிடம் PRAN மற்றும் தற்போதைய அடுக்கு II கணக்கு இரண்டும் இருக்க வேண்டும். அடுக்கு II ஒரு தன்னார்வ சேமிப்புக் கணக்கு என்பதால், அரசாங்கத்தால் உங்கள் அடுக்கு கணக்கிற்கு எந்தப் பணமும் வழங்கப்படுவதில்லை, மேலும் பங்களிப்புகளுடன் தொடர்புடைய வரிச் சலுகைகள் எதுவும் கிடைக்காது.
அடுக்கு I சந்தாதாரர்கள், எந்த வரியும் இல்லாமல் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாகவோ அல்லது அதற்கு சமமானத் தொகையைத் திரும்பப் பெறலாம். இந்த வரம்பு அதாவது 1 லட்சத்துக்கு மேல் திரும்பப் பெறும்போது, மொத்தத் தொகையில் 20 சதவீதம் வரை வருமான வரி விதிக்கப்படும், அதேசமயம் மொத்த பங்களிப்பில் 80 சதவீதம் முதலீடு செய்யப்பட வேண்டும்.
NPS அடுக்கு II சந்தாதாரர்களைப் பொறுத்தவரை, அவர்கள் விரும்பும் அளவுக்கு திரும்பப் பெற முடியும். NPS கணக்கு, சேமிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் வேறு எந்த வங்கிக் கணக்கையும் போலவே ஆகிவிடும்.
மேலும் படிக்க | உலகப் பொருளாதாரங்களில் 4வது இடம் பிடித்து இந்தியா சாதனை! முதலிடம் எப்போது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ