Madhabi Puri Buch: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபலமான நிறுவனம் ஹிண்டன்பர்க் ரிசர்ச். பல முக்கியமான விஷயங்களை இந்த நிறுவனம் வெளிக்கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு முக்கிய செய்தியை வெளியிடப்போவதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், இந்தியாவில் செபியின் தலைவராக இருக்கும் மாதவி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் அதானி பண மோசடியில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கடல் சார்ந்த நிறுவனங்களில் இவர்கள் முதலீடு செய்து இருப்பதாக அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டது. இருப்பினும் செபியின் நம்பகத்தன்மையை போகச்செய்ய தான் இது போன்ற பொய்யான குற்றசாட்டுகளை முன் வைக்கின்றனர் என்று மாதவி பூரி புச் பதிலளித்துள்ளார்.
யார் இந்த மாதவி பூரி புச்?
இந்தியாவின் முக முக்கிய அமைப்பான செபியை வழிநடத்தும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார் மாதவி பூரி புச். மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து இந்த வேலையை பெற்ற முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 2017 முதல் முன்னாள் தலைவர் அஜய் தியாகியுடன் செபியில் பணிபுரிந்து வருகிறார். மும்பையில் பிறந்து வளர்ந்த மாதவிக்கு 21 வயதில் தவால் புச்சையுடன் திருமணம் நடைபெற்றது. இவரது தந்தை கமல் பூரி கார்ப்பரேட் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்தவர், தயார் ஆசிரியராக இருந்துள்ளார். மாதவியின் கணவர் தவால் புச் கடந்த ஜூலை 2019 முதல் பிளாக்ஸ்டோன் மற்றும் அல்வாரெஸ் & மார்சலில் நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக உள்ளார். இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு பிரிஸ்டில்கோன், ஹிந்துஸ்தான் யுனிலீவர் போன்ற நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார்.
மாதவி பூரி புச் வேலை
1989ல் ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரியத் தொடங்கிய அவர் தொடர்ந்து 17 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வங்கியின் நிர்வாக இயக்குனரானார். ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தை 2009 முதல் மே 2011 வரை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எம்டி மற்றும் சிஇஓவாக வழிநடத்தினார். மேலும் ஐசிஐசிஐ வெப் டிரேட் லிமிடெட் மற்றும் ஐசிஐசிஐ எச்எஃப்சி லிமிடெட் ஆகியவற்றிலும் பணி புரிந்துள்ளார். 1990 காலகட்டத்தில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் செஷயர் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார் மாதவி பூரி புச். கிரேட்டர் பசிபிக் கேபிடல் என்ற நிறுவனத்தில் பணிபுரிவதற்காக சிங்கப்பூர் சென்றார்.
2011 முதல் 2017 வரை அவர் ஜென்சார் டெக்னாலஜிஸ் இன்னோவன் கேபிடல் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் போன்ற பல்வேறு நிறுவனங்களில் முக்கியமான வேலைகளில் இருந்தார். மேலும் நியூ டெவலப்மென்ட் வங்கியின் ஆலோசகராகவும், இந்தியன் ஸ்கூல் ஆஃப் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட்டின் இயக்குநராகவும் பணியாற்றினார். 2017ம் ஆண்டு முதல் மாதவி பூரி புச் செபியில் முழுநேர பணியாளராக வேலை செய்ய தொடங்கினார். மார்ச் 2022 முதல் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியில் தலைமை பொறுப்பை ஏற்கும் முதல் பெண்மணி ஆனார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ