மூத்த குடிமக்களுக்கு அவர்கள் சேமித்து வைத்திருக்கும் பணமே அவர்களது மிகப்பெரிய சக்தியாக இருக்கின்றது. பணி ஓய்விற்கு பிறகு அவர்கள் சேமித்துள்ள தொகைதான் அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கின்றது. இது தவிர ஓய்வு காலத்தில் உத்தரவாதமான வருமானமும் அவர்களுக்கு தேவையான ஒன்றாகும். ஆகையால், உத்தரவாதமான வருமானத்தை அளிக்கக்கூடிய முதலீட்டு வழிகளுக்கான தேடல் அவர்களிடம் எப்போதும் இருக்கும். பெரும்பாலான மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்பு (Fixed Deposit-FD) ஒரு சிறந்த முதலீட்டு வழிமுறையாக உள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமும் (SCSS) அத்தகைய பாதுகாப்பான திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் வயதானவர்களுக்கு முதலீட்டில் சிறந்த வருமானத்தை அளிக்கும். ஆனால் இந்த திட்டத்தில் ஒருவர் 5 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், தபால் அலுவலக எஃப்டி (FD) அல்லது 5 வருட எஸ்சிஎஸ்எஸ் (SCSS) திட்டம் என இரண்டில் எந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்ய வேண்டும்? எது இவர்களுக்கு அதிக லாபத்தை அளிக்கும்? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Post Office FD vs SCSS: எந்த திட்டம் சிறந்தது?
FD மற்றும் SCSS திட்டங்கள் இரண்டும் வேறுபட்டவை. மேலும், இரண்டின் வட்டியும் வேறுபட்டது. மூத்த குடிமக்களுக்கு எந்தத் திட்டம் சிறந்தது என்பது அவர்களின் தேவைகள் மற்றும் எவ்வளவு காலத்திற்கு அவர்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு நபர் 1, 2, 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்பினால், அவர் FD விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். அஞ்சல் அலுவலகம் (Post Office) மற்றும் வங்கி ஆகிய இரண்டிலும் FD இன் விருப்பத்தைப் பெறுவீர்கள். அதிலிருந்து நீங்கள் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு உங்களுக்கான சிறந்த விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) 1, 2, 3 மற்றும் 5 வருட FD விருப்பம் கிடைக்கும். 1 வருட FD -க்கு 6.9% வட்டி கிடைக்கும். 2 மற்றும் 3 வருட FD -க்கு 7% மற்றும் 5 வருட FD -க்கு 7.5% வட்டி கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (SCSS), 8.2% என்ற வட்டி விகிதம் கிடைக்கிறது. 5 ஆண்டு FD மற்றும் SCSS ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால், SCSS என்பது லாபகரமான திட்டமாக இருக்கும். எஸ்சிஎஸ்எஸ் -இல் குறைந்தபட்சம் ரூ 1000 மற்றும் அதிகபட்சம் ரூ 30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். முன்னதாக அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெபாசிட் செய்யப்பட்ட தொகை முதிர்ச்சியடைகிறது, அதாவட்து மெஸ்யூர் ஆகிறது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது தவிர, விஆர்எஸ் (VRS) பெற்ற 55-60 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் குறைந்தபட்சம் 60 வயதுடைய ஓய்வு பெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் ஆகியோரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தின் வட்டி விகிதம்
மத்திய அரசு கடந்த வாரம் அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்ட வட்டி விகிதங்களை அறிவித்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 31, 2023 இல் முடிவடையும் நிதி காலாண்டில் சில சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் தபால் அலுவலக திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தியது. இதில் ஐந்து ஆண்டுகளுக்கான தொடர் வைப்புத் திட்டத்தின் வட்டியை அரசு அதிகரித்தது. டிசம்பர் 2023 காலாண்டில் SCSS இல் 8.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது பல பெரிய வங்கிகளின் ஃபிக்ஸ்ட் டெபாசிட் விகிதங்களை விட அதிகமாகும். ஒருமுறை முதலீடு செய்தால், டெபாசிட் காலம் முழுவதும் வட்டி விகிதம் அப்படியே இருக்கும்.
மேல்லும் படிக்க | FD முதலீடுகளுக்கு வட்டியை அள்ளித் தரும் ‘3’ வங்கிகள்... முழு விபரம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ