SBI Vs HDFC vs IDBI FD Schemes: பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க, அதிக வட்டி விகிதங்களுடன் FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன. அந்தவகையில் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி போன்ற முக்கிய வங்கிகளின் சிறப்பு நிலையான வைப்பு திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இதில், முதலீட்டாளர்கள் சரியான நேரத்தில் முதலீடு செய்து அதிக வட்டியைப் பெறலாம்.
HDFC வங்கியின் சீனியர் சிட்டிசன் கேர் FD
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத்தொகையை முதலீட்டு திட்டத்தை வழங்குகிறது. HDFC வங்கியின் சீனியர் சிட்டிசன் கேர் FD திட்டத்தில் 15 ஏப்ரல் 2024 வரை முதலீடு செய்யலாம். எச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு பொதுவாக வழங்கப்படும் கூடுதல் 0.50 சதவீதத்துடன், மேலும் 0.25 சதவீத கூடுதல் வட்டி அளிக்கிறது. அதாவது மூத்த குடிமக்களுக்கு வங்கி 0.75 சதவீதம் கூடுதல் வட்டி அளிக்கிறது. இது உங்களின் வழக்கமான FDயை விட சற்று அதிக வட்டி விகிதம். மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD முதலீடுகளுக்கு 7.75 சதவீதம் வட்டி கிடைக்கும். 5 கோடிக்கும் குறைவான FD முதலீடுகள் இந்த வட்டி விகிதம் பொருந்தும். சீனியர் சிட்டிசன் கேர் FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி 15 ஏப்ரல் 2024 ஆகும். HDFC வங்கி வழக்கமான FD முதலீடுகளுக்கு மூத்த குடிமக்களுக்கு 3.50% முதல் 7.75% வரை வட்டி வழங்குகிறது.
எஸ்பிஐ வங்கி வீகேர் (SBI WeCare)
எஸ்பிஐ வங்கி வீகேர் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை SBI நீட்டித்துள்ளது. எஸ்பிஐயின் இந்தத் திட்டம் ம்மூலம் மூத்த குடிமக்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதலீட்டில் அதிக வட்டியை வழங்குகிறது. SBI WeCare குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக தொடங்கப்பட்டது பிரத்யேக திட்டம். எஸ்பிஐயின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31, 2024 என இருந்த நிலையில், இப்போது செப்டம்பர் 30, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி வீகேர் திட்ட முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 7.50%. எஸ்பிஐ வங்கி வீகேர் FD திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது . அனைத்து வகையான பிற எஃப்டி முதலீடுகளுக்கும், சாதாரண வாடிக்கையாளரை விட மூத்த குடிமக்களுக்கு 0.50 கூடுதல் வட்டியை எஸ்பிஐ வங்கி வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ அம்ரித கலசம் திட்டம்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) சிறப்பு FD திட்டமான 'அம்ரித் கலஷ்' என்னும் அம்ரித கலசம் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலகெடுவை நீட்டித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் சிறப்பு எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு 2024 மார்ச் 31 ஆக இருந்தது, தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐயின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 30, 2024 வரை அவகாசம் உள்ளது. SBI 'அம்ரித் கலஷ்' திட்டம் 400 நாளுக்கான FD திட்டம் ஆகும். இதில் 7.6 சதவீத வட்டி கிடைக்கும். SBI வங்கியின் அம்ரித கலசம் என்னும் சிறப்பு FD திட்டத்தில் முதலீடு செய்யும் வழக்கமான வாடிக்கையாளர் 7.10% வட்டி பெறுவார்கள். மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டி கிடைக்கும்.
மேலும் படிக்க | இனி பணம் எடுக்க ஏடிஎம் செல்ல வேண்டாம்! வீடு தேடி பணம் வந்து சேரும்!
ஐடிபிஐ வங்கி உத்சவ் சிறப்பு FD
தனது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஐடிபிஐ வங்கி உத்சவ் எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை வங்கி நீட்டித்துள்ளது. ஐடிபிஐ வங்கி 300 நாட்கள், 375 நாட்கள் மற்றும் 444 நாட்களுக்கான சிறப்பு FD திட்டங்களில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. சிறப்பு FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31, 2024 என இருந்த நிலையில், தற்போது ஜூன் 30, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
IDBI உத்சவ் 444 நாட்களுக்கான FD திட்டம்
உத்சவ் எஃப்டி திட்டத்தில் ஜூன் 30, 2024 வரை முதலீடு செய்யலாம். ஐடிபிஐ வங்கி, உத்சவ் எஃப்டி திட்டத்தில் 444 நாட்களுக்கு முதலீடு செய்வதற்கு வழக்கமான வாடிக்கையாளர்களான என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி கிடைக்கும். முதலீட்டாளர்கள், தேவைப்பட்டால் இந்த FD முதலீட்டில் இருந்து முதிர்வு காலத்திற்கு முன்னதாக பணத்தை திரும்ப பெறவும் வங்கி அனுமதிக்கிறது.
IDBI உத்சவ் FD திட்டம் 375 நாட்கள்
ஐடிபிஐ வங்கி 375 நாட்கள் உத்சவ் எஃப்டியில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டி கிடைக்கும். அதே நேரத்தில், வழக்கமான வாடிக்கையாளர்கள், என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு 375 நாட்களுக்கு 7.10% வட்டி கிடைக்கும். தேவைப்பட்டால் முதிர்வு காலத்திற்கு முன்னதாக பணத்தை திரும்ப பெறவும் வங்கி அனுமதிக்கிறது.
IDBI உத்சவ் 300 நாட்கள் FD திட்டம்
ஐடிபிஐ வங்கி 300 நாட்கள் உத்சவ் எஃப்டியில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டி கிடைக்கும். அதே நேரத்தில், வழக்கமான வாடிக்கையாளர்கள், என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு 300 நாட்களுக்கான எஃப்டி முதலீடுகளுக்கு 7.05% வட்டி அளிக்கிறது. முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை எடுப்பதற்கான விருப்பத்தையும் வங்கி வழங்குகிறது.
மேலும் படிக்க | ஆன்லைன் மூலம் கடன் வாங்க போறீங்களா? இந்த விஷயங்களில் கவனம் தேவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ