SBI Senior Citizens Scheme: அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. வயதிற்கு ஏற்ப இந்த தேவையின் அளவு மாறுகிறது. பொதுவாக நாம் அனைவரும் முதுமைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைக்க விரும்புகிறோம். வயோதிகத்தில் மாதா மாதம் நிலையான ஒரு வருமானம் இருப்பது மிக அவசியமாகும்.
மூத்த குடிமக்களுக்கு நிலையான வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் நம் நாட்டில் உள்ளன. மூத்த குடிமக்களுக்கான இந்தத் தேவையை மனதில் கொண்டு, பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை (SCSS) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாக இருப்பதோடு மட்டுமல்ல, வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கின் பலனையும் இது வழங்குகிறது.
SBI Senior Citizens Saving Scheme: குறைந்தபட்ச முதலீட்டில் தொடங்கலாம்
SBI மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (SBI SCSS) வெறும் ரூ.1000 முதல் முதலீட்டை தொடங்க முடியும். ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரரின் வயது குறைந்தது 60 வயதாக இருக்க வேண்டும். ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் 55-60 வயதிலும், பாதுகாப்புப் பணியாளர்கள் 50-60 வயதிலும் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி விகிதம் என்ன? இதன் வருமான கணக்கீடுகள் என்ன?
- SCSS திட்டத்தில் முதலீட்டாளர்கள் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும் வட்டி விகிதங்களின் பலனைப் பெறுகிறார்கள்.
- இது காலாண்டு அடிப்படையில் திருத்தப்படக்கூடும்.
= தற்போது இந்த திட்டத்தில் 8.2% வட்டி கிடைக்கிறது.
- அதிகபட்சம் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.20,050 வட்டி கிடைக்கும்.
- காலாண்டு அடிப்படையில் இந்தத் தொகை ரூ.60,150 ஆக இருக்கும்.
- இதன் மூலம், முதலீட்டாளர்கள் 5 ஆண்டுகளில் வட்டி மூலம் மட்டுமே ரூ.12,03,000 வருமானம் பெறலாம்.
மேலும் படிக்க | PF ஏடிஎம் கார்டு, மொபைல் செயலி இந்த நாளில் அறிமுகம்: எவ்வளவு தொகை எடுக்கலாம்?
SCSS: வரி விலக்கு எவ்வளவு?
ஒரு நிதியாண்டில் SCSS கணக்குகளில் பெறப்படும் வட்டி ரூ.50,000க்கு மேல் இருந்தால், அதற்கு வரி விதிக்கப்படும். இருப்பினும், 1.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுத் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டெபாசிட் காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்க முடியுமா?
SCSS க்கு 5 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. இது 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். இந்த கால அளவிற்கு இடையில் பணத்தை எடுக்க விரும்பினால், அபராதம் செலுத்த வேண்டும்.
- 1 வருடத்திற்குள் தொகையை எடுத்தால் வட்டி வழங்கப்படாது.
- 1 - 2 ஆண்டுகளுக்கு இடையில் பணம் எடுத்தால் 1.5% அபராதம் விதிக்கப்படும்.
- 2 - 5 ஆண்டுகளுக்குள் பணம் எடுத்தால் 1% அபராதம் கழிக்கப்படும்.
எஸ்பிஐ மூத்த குடிமக்கள் திட்டத்தின் பலன்கள் என்ன?
- பாதுகாப்பான மற்றும் நிலையான முதலீட்டு வழிகள்
- அதிக வட்டி விகிதங்கள்
- வரி விலக்கு நன்மை
- திட்டம் முடியும் முன்னரே பணம் எடுக்கும் வசதி
மேலும் படிக்க | SIP: ரூ.10,000 முதலீட்டை ரூ.21 கோடியாக மாற்றிய சூப்பர் மியூச்சுவல் ஃபண்டு இது தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ