SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி... MCLR வட்டி விகிதம் குறைப்பு...!

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைத்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது..!

Last Updated : Jul 8, 2020, 02:26 PM IST
SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி... MCLR வட்டி விகிதம் குறைப்பு...! title=

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைத்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது..!

நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) புதன்கிழமை குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. நிதி அடிப்படையிலான கடன் வீதத்தின் (MCLR) அதன் விளிம்பு செலவு 5-10 அடிப்படை புள்ளிகள் (5-10 சதவீத புள்ளி) குறைக்கப்படும் என்று SBI தெரிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் ஜூலை 10 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி, தன் ரெப்பொ ரேட் வட்டி விகிதங்களைக் குறைத்ததற்கான பலனாக, தற்போது SBI-ன் கடனுக்கான வட்டி விகிதங்களையும் குறைத்து கொண்டு வருவது போல தெரிகிறது. SBI வங்கி  MCLR வட்டி விகிதங்களை எவ்வளவு குறைத்து இருக்கிறார்கள். இதனால் யாருக்கு என்ன பலன்..? இது குறித்து SBI தரப்பில் என்ன சொல்கிறார்கள்? என்பதை காணலாம். 

READ | JIO-க்கு இணையான ஏர்டெல்-ன் அதிரடி திட்டம்... பிரீமியம் ZEE5 சந்தா இலவசம்!!

SBI 0.05 - 0.10 சதவிகிதம் வரை MCRL வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள். இந்த புதிய வட்டி விகிதங்கள், ஜூலை 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். ஓவர் நைட் & ஒரு மாத காலத்துக்கான MCRL 0.05 % குறைத்து இருக்கிறார்கள். அதே போல 3 மாத காலத்துக்கான MCRL வட்டி விகிதங்களை 0.10 % குறைத்து இருக்கிறார்கள். 6 மாதம், 1 வருடம், 2 வருடம், மற்றும் 3 வருட MCRL வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.

SBI-யின் MCRL வட்டி விகிதங்கள் அடிப்படையில் கொடுக்கப்படும் கடன்களின் வட்டி விகிதங்கள் குறையலாம். அதுவும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மட்டுமே குறையும். இந்த வட்டி விகித குறைப்பு, பொருளாதாரத்தில் டிமாண்டை அதிகரிக்க உதவும். SBI வங்கி நிர்வாகம் MCRL வட்டி விகிதங்களைக் குறைப்பது இதோடு சேர்த்து, 14 ஆவது முறையாகும். இந்திய வங்கிகள் கொடுக்கும் MCRL வட்டி விகிதங்களில், SBI கொடுக்கும் MCRL வட்டி விகிதங்கள் தான் மிகக் குறைவு எனவும் SBI தரப்பில் இருந்தே சொல்லி தெரிவித்துள்ளனர்.

Trending News