Samsung Galaxy A32 Price in India: நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் தனது புதிய கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போனை (Galaxy A-series Smartphone) இந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்வதாக உறுதிப்படுத்தியுள்ளது. கேலக்ஸி ஏ 32 ஸ்மார்ட்போனை மார்ச் 5 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக சாம்சங் (Samsung) நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் விலை குறித்து தகவலகள் வெளியாகி உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ 32 இன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ .21,999 என்று இஷான் அகர்வால் ட்வீட் செய்துள்ளார்.
சாம்சங் கேலக்ஸி ( Galaxy A32) ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது..
ALSO READ | 7000mAh பேட்டரியுடன் Samsung இன் சிறந்த ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் பெறுங்கள்
இந்த சாம்சங் வரிசை ஸ்மார்ட்போன் ரஷ்யா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளின் சந்தைகளில் 4 ஜி மற்றும் 5 ஜி ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வகை ஸ்மார்ட்போன்கள் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டது.
சாம்சங் (Samsung Galaxy) கேலக்ஸி ஏ 32 ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம் உடனாக 64 ஜிபி / 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜுடன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
Samsung Galaxy A32 (4G, Mediatek Helio G80) is going on sale in India on March 5th.
I've got my hands on the pricing.
It will cost Rs. 21,999 for 6GB RAM + 128GB Storage variant.
Do you like the price? #GalaxyA32 #Samsung pic.twitter.com/YPNNw49FdM
— Ishan Agarwal (@ishanagarwal24) March 2, 2021
சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி, பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்புடன் 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.
ALSO READ | Amazon Fab Phones Fest: ஸ்மார்ட்ஃபோன்களில் 40% வரை தள்ளுபடி, அரிய வாய்ப்பு, don’t miss
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR