டிசம்பருக்கு முன்னாடி Royal Enfield Himalayan 452 பைக் புக் பண்ணிடுங்க! விலையும் குறைவு

Royal Enfield Himalayan 452 bike price: ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 அறிமுகமானது, முன்பதிவும் தொடங்கியது; விலை உட்பட அனைத்து சிறப்பம்சங்களும் அட்டகாசம்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 25, 2023, 06:44 AM IST
  • 3 வேரியண்டுகளில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்
  • ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 அறிமுகமானது
  • 5 வண்ணங்களில் கிடைக்கும் பைக்
டிசம்பருக்கு முன்னாடி Royal Enfield Himalayan 452 பைக் புக் பண்ணிடுங்க! விலையும் குறைவு title=

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் மோட்டார் சைக்கிள் திருவிழாவான மோட்டோவர்ஸ் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழா கோவாவில் நடைபெற்றது. ஐச்சர் மோட்டார் இந்த பைக்கை முதன்முறையாக EICMA 2023 இல் வெளியிட்டது. இந்த பைக்கிற்கான முன்பதிவு நேற்று (நவம்பர் 24) முதல் தொடங்கியது இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்த பைக்கின் முன்பதிவு மார்ச் 2024 முதல் ஐரோப்பாவிலும் தொடங்கும்.

ராயல் என்ஃபீல்டு விலை 269000

இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கிற்காக பைக் பிரியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இந்த பைக்கை வெளியிட்ட நிறுவனம், புதிய பைக் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 31 டிசம்பர் 2023 வரை சிறப்பு சலுகையின் கீழ், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 ஐ 269000 ரூபாய்க்கு முன்பதிவு செய்யலாம் என்று தகவல் தெரிவித்திருக்கிறது. இந்த பைக் 3 வேரியண்ட்கள் மற்றும் 5 வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 முன்பதிவு துவக்கம் 
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே முன்பதிவு வந்து குவியத் தொடங்கியது. இந்தியாவில் 31 டிசம்பர் 2023 வரை அறிமுக விலை ரூ.2.69 லட்சம் என்பதும், 3 வகைகள் மற்றும் 5 வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கான இதன் விலை 5750 பவுண்டுகளாகவும், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற பிற ஐரோப்பிய சந்தைகளுக்கு அதன் விலை 5900 யூரோக்களாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | புல்லட் பைக்கில் ரொம்ப தூரம் பயணம் செய்ய ஆசையா... வருகிறது புதிய முரட்டு பைக் - முழு விவரம் இதோ!

5 வண்ண வகைகள் என்ன?

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பேஸ், பாஸ் மற்றும் சம்மிட் ஆகிய மூன்று வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  காஸா பிரவுன், பாப்பி ப்ளூ மற்றும் ஹிமாலயன் சால்ட் ஆகியவை அடிப்படை வகையிலும், பாஸ் அல்லது மிட் வகையிலும், ஹன்லே பிளாக் மற்றும் காமெட் ஒயிட் ஆகியவை டாப் வேரியண்டிலும் கிடைக்கின்றன.

அடிப்படை வேரியண்ட் விலை
இந்த பைக், பல்வேறு நிறங்கள் மற்றும் வேரியண்ட்களில் கிடைத்தாலும் இந்தியாவில் அனைத்தும் அறிமுகமாகவில்லை. இந்தியாவில் அடிப்படை மாடலில் காசா பிரவுன் வண்ணம் மட்டுமே கிடைக்கிறது மற்றும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.69 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுத்தர வேரியண்ட் விலை
இரண்டு வண்ண விருப்பங்கள் உள்ளன, அதாவது பாஸ் மாறுபாடு. ஹிமாலயன் சால்ட் கலரின் விலை ரூ.2.74 லட்சமாகவும், பாப்பி ப்ளூ கலரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.79 லட்சமாகவும் உள்ளது.

சிறந்த வேரியண்ட்டின் விலை
இந்தியாவில் டாப் மாடல் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. கமெட் ஒயிட் நிறத்தின் விலை ரூ.2.79 லட்சமாகவும், ஹேன்லே பிளாக் கலரின் விலை ரூ.2.84 லட்சமாகவும் உள்ளது. இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பல்சர் காதலர்களே ரெடியா... விரைவில் NS400 - விலை, ரிலீஸ் தேதி, சிறப்பம்சங்கள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News