திடீரென ஏற்றம் கண்ட தக்காளியின் விலை; காரணம் என்ன?

கிட்டத்தட்ட அனைத்து பெரிய நகரங்களிலும் தக்காளியின் சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் 70 வரை உயர்ந்துள்ளது. திடீர் விலை ஏற்றத்திற்கான காரணம் என்ன?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Mukesh M | Last Updated : Jul 10, 2020, 08:07 AM IST
  • கிட்டத்தட்ட அனைத்து பெரிய நகரங்களிலும் தக்காளியின் சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் 70 வரை உயர்ந்துள்ளது.
  • சென்னை தவிர மெட்ரோ நகரங்களில் தக்காளி சில்லறை விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60-ஆக இருந்தது.
  • உற்பத்தி செய்யும் மாநிலங்களிலும் இந்த விலை ஏற்றத்தின் தாக்கம் இருந்தது.
திடீரென ஏற்றம் கண்ட தக்காளியின் விலை; காரணம் என்ன? title=

கிட்டத்தட்ட அனைத்து பெரிய நகரங்களிலும் தக்காளியின் சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் 70 வரை உயர்ந்துள்ளது. திடீர் விலை ஏற்றத்திற்கான காரணம் என்ன?

தக்காளியின் திடீர் விலை ஏற்றத்திற்கான காரணமாக, நுகர்வோர் விவகார அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவிக்கையில்., பருவம் மற்றும் பொருட்களின் அதிக அழிவு காரணமாக ஏற்பட்ட மெலிந்த உற்பத்தி இந்த விலை காரணமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

READ | கோடை காலத்தில் தக்காளியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்...

அமைச்சின் சமீபத்திய தரவுகளின்படி, வியாழக்கிழமை சென்னை தவிர மெட்ரோ நகரங்களில் தக்காளி சில்லறை விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60-ஆக இருந்தது.

சில பகுதிகளில், தக்காளியின் விலை 70 முதல் 80 ரூபாய் வரை விற்கப்பட்டது. குர்கான், கேங்டாக், சிலிகுரி மற்றும் ராய்ப்பூரில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.70 ஆகவும், கோரக்பூர், கோட்டா மற்றும் திமாபூரில் கிலோ ஒன்றுக்கு ரூ.80-ம் நிர்ணயிக்கப்பட்டது.

உற்பத்தி செய்யும் மாநிலங்களிலும் இந்த விலை ஏற்றத்தின் தாக்கம் இருந்தது, குறிப்பிடத்தக்க வகையில் ஹைதராபாத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.37-க்கு விற்கப்பட்டது, சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 மற்றும் பெங்களூருவில் ரூ.46-க்கும் விற்கப்பட்டன.

உயரும் விலைகள் குறித்து பாஸ்வான் மேலும் கூறுகையில்., "பொதுவாக, பருவ நிலை காரணமாக உண்டாகும் மெலிந்த உற்பத்தி காலத்தில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) தக்காளியின் விலை அதிகமாக இருக்கும். பொருட்களின் அழிவு காரணமாக விலை ஏற்ற இறக்கம் நிகழ்வது வழக்கம்" என தெரிவித்துள்ளார்.

உற்பத்தி மற்றும் விநியோகம் மேம்பட்டவுடன் விலைகள் இயல்பான நிலைக்கு திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மெலிந்த காலத்தில் தக்காளியின் விலைகள் பொதுவாக அதிகரிக்கும் என்பதை அவர், கடந்த ஐந்து ஆண்டு தரவுகளையும் மேற்கொள் காட்டினார். 

READ | கோடை காலத்தில் தக்காளியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்...

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பஞ்சாப், தமிழ்நாடு(Tamilnadu), கேரளா(Kerala), ஜம்மு-காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவை நாட்டில் தக்காளி உற்பத்தி பற்றாக்குறை உள்ள மாநிலங்கள்.

அவை விநியோகத்திற்காக உபரி உற்பத்தி செய்யும் மாநிலங்களை சார்ந்துள்ளது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாடு ஆண்டுக்கு சுமார் 19.73 மில்லியன் டன் தக்காளியை உற்பத்தி செய்கிறது, அதே நேரத்தில் தக்காளியின் நுகர்வு சுமார் 11.51 மில்லியன் டன் ஆகும்.

Trending News