புதுடெல்லி: PVR லிமிடெட் மற்றும் INOX Leisure ஆகிய நிறுவனங்கள் இணைகின்றன. மார்ச் 27, 2022 ஞாயிற்றுக்கிழமை இரு நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களின் வாரியக் கூட்டத்தில் இதற்கான முடிவை எடுத்தன.
இரண்டு மல்டிபிளக்ஸ் தியேட்டர் சங்கிலி நிறுவனங்களின் அனைத்து பங்குகளையும் ஒன்றிணைக்கம் இரு நிறுவனங்களின் வாரியக்கூட்டத்தில் ஒப்புதல் கொடுத்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு முறையே PVR மற்றும் INOX பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது, பங்குச் சந்தைகள், SEBI மற்றும் தேவைப்படும் பிற ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
PVR and INOX announce their merger. pic.twitter.com/Z24VZogJi8
— ANI (@ANI) March 27, 2022
இந்த விவரத்தை, இந்தியாவின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் சங்கிலி நிறுவனமான - PVR ஒரு பரிமாற்றத் தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், “1500 க்கும் மேற்பட்ட திரைகள் கொண்ட நெட்வொர்க்குடன் இணையற்ற நுகர்வோர் அனுபவத்தை வழங்க இந்தியாவின் இரண்டு சிறந்த சினிமா பிராண்டுகளை ஒன்றிணைக்க வேண்டும். வளர்ச்சி சாத்தியம் மற்றும் குறிப்பிடத்தக்க நிரப்புத்தன்மை ஆகியவை இணைப்பை இயக்குகிறது. இது, வருவாய் மற்றும் செலவு என அனைத்தையும் ஒருங்கிணைக்க வழிவகை செய்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ராஜமௌலிக்கு பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் கொடுத்துள்ள பட்டம்
INOX இன் பங்குதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனை விகிதத்தில் ("swap") INOX இல் உள்ள பங்குகளின் பரிமாற்றத்தில் PVR இன் பங்குகளைப் பெறுவார்கள்.
இந்த இணைப்பு ஒரு பங்கு பரிவர்த்தனை ("ஸ்வாப்") விகிதத்தில் மேற்கொள்ளப்படும், அங்கு PVR இன் 3 பங்குகள் INOX இன் 10 பங்குகளுக்கு மாற்றப்படும்.
இணைப்பிற்குப் பிறகு, INOX இன் விளம்பரதாரர்கள், PVR இன் தற்போதைய விளம்பரதாரர்களுடன் இணைக்கப்பட்ட நிறுவனத்தில் இணை விளம்பரதாரர்களாக மாறுவார்கள்.
ஒருங்கிணைந்த நிறுவனம் PVR மற்றும் INOX ஆக தொடர, ஏற்கனவே உள்ள திரைகளின் பிராண்டிங்குடன் PVR INOX Limited என பெயரிடப்படும். இணைப்பிற்குப் பிறகு புதிய திரையரங்குகள் திறக்கப்படும். இவற்றுக்கு PVR INOX என பெயரிடப்படும்.
மேலும் படிக்க | 27 ஆண்டு சாதனையை முறியடித்த பாபர் அசாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR