உத்திரவாத வருமானம் அளிக்கும் ‘சில’ சிறந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்!

Post Office Saving Schemes: அஞ்சலக திட்டங்களின் வட்டி விகிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் திருத்தப்படுகிறது. பணவீக்க விகிதத்தை மனதில் கொண்டு இந்த வட்டி விகிதங்கள் திருத்தப்படுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 10, 2023, 09:03 AM IST
  • PPF-ல் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
  • மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழில் 2 லட்ச ரூபாய் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் 2.32 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
  • கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
உத்திரவாத வருமானம் அளிக்கும் ‘சில’ சிறந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்! title=

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்: நாட்டில் பல சேமிப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த சேமிப்புத் திட்டம் நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும், குழந்தைகள், பெண்கள், பெண் குழந்தைகள், ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முதியோர்களுக்கானது. இந்த அரசாங்கத் திட்டங்கள் சாமானியர்களுக்கு எதிர்காலத்திற்கான பெரிய நிதியையும், இன்றைய சேமிப்பையும், ஓய்வுக்குப் பிறகும் கண்ணியத்துடன் வாழ வாய்ப்பளிக்கிறது. சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த அஞ்சல் அலுவலக திட்டங்களின் வட்டி விகிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் திருத்தப்படுகிறது. பணவீக்க விகிதத்தை மனதில் கொண்டு இந்த வட்டி விகிதங்கள் திருத்தப்படுகின்றன. தபால் அலுவலகத்தின் 5 ஆண்டு RD மீதான வட்டி விகிதங்களை அரசாங்கம் சமீபத்தில் திருத்தியுள்ளது. தபால் நிலையத்தின் சேமிப்பு திட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்.

PPF கணக்கு

எந்தவொரு தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கிளையிலும் நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கைத் திறக்கலாம். இந்த கணக்கை வெறும் 500 ரூபாய்க்கு திறக்கலாம். பிபிஎஃப்-ல் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்தக் கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். முதிர்ச்சியடைந்த பிறகு, நீங்கள் அதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். PPF திட்டத்திற்கு 7.1 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. பிபிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 டெபாசிட் செய்து 15 வருடங்கள் பராமரித்தால், மொத்தம் ரூ.40.68 லட்சத்தை முதிர்ச்சியில் பெறுவீர்கள். இதில் உங்கள் மொத்த முதலீடு ரூ.22.50 லட்சமாக இருக்கும். அதே சமயம் உங்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானம் ரூ.18.18 லட்சமாகும். இந்தக் கணக்கீடுகள் 15 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. வட்டி விகிதம் மாறினால், முதிர்வு காலத்தில் பணம் மாறலாம்.

மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் (Mahila Samman Savings Certificate)

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்பது பெண் முதலீட்டாளர்களுக்காக அரசு நடத்தும் திட்டமாகும். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் 27 ஜூன் 2023 முதல் முதலீட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இதில் 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் மார்ச் 2025 வரை அதாவது இரண்டு வருட காலத்திற்கு முதலீட்டிற்குத் திறந்திருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் அல்லது சிறுமிகள் பெயரில் ரூ.2 லட்சம் முதலீடு செய்யலாம். இதில், ஒவ்வொரு ஆண்டும் 7.5 சதவீத நிலையான வட்டி கிடைக்கும். கணக்கு தொடங்கி 1 வருடம் கழித்து 40 சதவீத பணத்தை திரும்பப் பெறலாம். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழில் 2 லட்ச ரூபாய் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் 2.32 லட்சம் ரூபாய் கிடைக்கும். இது FD போலவே செயல்படுகிறது.

தொடர் வைப்பு (RD)

அஞ்சல் அலுவலகம் தொடர் வைப்பு கணக்கு 5 ஆண்டுகளுக்கு உத்தரவாதமான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு பாதுகாப்பான விருப்பமாகும். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.100 அல்லது எந்தப் பணத்தையும் ரூ.10 இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அக்டோபர் 1, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை, 5 ஆண்டு அஞ்சல் அலுவலக RD க்கு இப்போது 6.5 சதவீதத்திற்குப் பதிலாக 6.7 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான செம ஜாக்பாட்.. டபுள் வருமானம் கிடைக்கும்

கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra)

கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்கலாம். இதற்குப் பிறகு ரூ.100 மடங்குகளில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை. கூட்டுக் கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம். அரசு தனது முதலீட்டுக்கு 7 சதவீதத்துக்கு மேல் வட்டி தருகிறது. கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும் பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகும். கிசான் விகாஸ் பத்திர திட்டத்தின் கீழ், 10 வயதுக்குட்பட்ட மைனர் பெயரிலும் கணக்கைத் திறக்கலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Saving Scheme)

புதிய வரி முறையை அமல்படுத்துவதுடன், மூத்த குடிமக்களுக்கான பெரிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதன் கீழ், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (SCSS) முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த மாற்றத்தால், மூத்த குடிமக்கள் முன்பை விட முதலீட்டில் அதிக லாபம் பெறுகின்றனர். தற்போது அதற்கான வட்டி 8.2 சதவீதமாக உள்ளது. நிதியமைச்சர் முதலீட்டு வரம்பை ரூ.30 லட்சமாக அதிகரித்தால், வட்டி விகிதத்தை 8.2 சதவீதமாக கணக்கிட்டா;, ஐந்தாண்டு முதிர்வு காலத்தில் ரூ.12.30 லட்சம் வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.42.30 லட்சம் கிடைக்கும். இதில் நீங்கள் மாதாந்திர அடிப்படையில் ரூபாய் 20,500 பெறுவீர்கள். அரசின் இந்த திட்டத்தில், மூத்த குடிமக்கள் மாதந்தோறும் வட்டியாக பணம் பெறுகின்றனர்.

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்ச வைப்புத்தொகைக்கு வரம்பு இல்லை. எந்தவொரு நபரும் தனது சொந்த பெயரில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ ஒரு வயது வந்தவருடன் கணக்கைத் தொடங்கலாம். மைனர் சார்பாக கணக்கைத் திறக்கலாம். இந்த திட்டத்திற்கு 4 சதவீத வட்டியை அரசு வழங்குகிறது.

செல்வ மகள் சேமிப்பு திட்டம் 

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 21 ஆண்டுகளுக்கானது. ஆனால் மகளின் பெற்றோர் முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். 6 ஆண்டுகளாக பணம் டெபாசிட் செய்யாமல் கணக்கு செயல்பாட்டில் இருக்கும். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ், 10 வயதுக்குட்பட்ட மகள்களின் கணக்குகள் அவர்களின் பெற்றோரின் பெயரில் மட்டுமே திறக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். 250 ரூபாயில் சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ் கணக்கைத் தொடங்கலாம். இதற்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்காக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க | அடிச்சது ஜாக்பாட்! ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 9.11% வரை வட்டி, எந்த வங்கி கொடுக்கிறது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News