Post Office Scheme: அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் TDS கழிக்கப்படாது! யார் யாருக்கு பயன்?

Post Office Scheme: மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டத்திற்கான மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்) விதியை அறிவித்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : May 20, 2023, 09:29 AM IST
  • குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.2 வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
  • எம்எஸ்எஸ்சி திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 2 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும்.
  • எம்எஸ்எஸ்சி திட்டத்தில் ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
Post Office Scheme: அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் TDS கழிக்கப்படாது! யார் யாருக்கு பயன்? title=

Post Office Scheme: பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களும், சேமிப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  அந்த வகையில் நாட்டிலுள்ள பெண்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்க சேமிப்புத் திட்டத்தில் பெறப்படும் வட்டியில் 'மகளிர் கௌரவ சேமிப்புச் சான்றிதழ்' (எம்எஸ்எஸ்சி) டிடிஎஸ் கழிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு என்ன வட்டி கிடைக்கிறதோ, அந்த வட்டி வருமானத்திற்கு வரி அடுக்குக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். கடந்த மே 16ம் தேதியன்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டத்திற்கான மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்) விதியை அறிவித்துள்ளது.  இதன் கீழ், எம்எஸ்எஸ்சி கணக்கை நாட்டின் எந்தவொரு பெண்ணின் பெயரிலுமோ அல்லது பெண் குழந்தைகளின் பாதுகாவலர் பெயரிலோ திறக்க முடியும்.

மேலும் படிக்க | வங்கி கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவது எப்படி?

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் நடப்பு நிதியாண்டில் தொடங்கப்பட்டுள்ளது, இந்த திட்டத்தை  2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்குதலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  பெண்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ், எந்தவொரு பெண்ணும் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.2 வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.  ஆனால் இந்த தொகையை ஒரே தவணையாக டெபாசிட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.  மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 2 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் மற்றும் கணக்கை ஆறு மாதத்திற்கு பின்னர் முன்கூட்டியே முடித்துக்கொள்ளவும் அனுமதி உண்டு.

ஒரு நிதியாண்டில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழில் கிடைக்கும் வட்டி ரூ. 40,000-க்கு மிகாமல் இருந்தால் டிடிஎஸ் கழிக்கப்படாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அறிவிப்பில் தெரிவித்துள்ளதாக நங்கியா ஆண்டர்சன் இந்தியாவின் பங்குதாரர் நீரஜ் அகர்வால் தெரிவித்துள்ளார்.  நீரஜ் அகர்வால் கூறுகையில், “இத்திட்டத்தின் கீழ், 7.5 சதவீத வட்டியில் ரூ.2 லட்சம் டெபாசிட்டிற்கு ஒரு வருடத்தில் சுமார் ரூ.15,000 வட்டி வழங்கப்படும், இந்த வட்டி இரண்டு வருடங்களில் மொத்தமாக ரூ.32,000 ஆக ஆகிவிடும்.  ஒரு நிதியாண்டில் வட்டி ரூ.40,000-க்கு குறைவாக இருப்பதால், டிடிஎஸ் கழிக்கப்படாது என்பது தெரியவந்துள்ளது.  டிடிஎஸ் என்பது இந்திய வருமானவரிச் சட்டம், 1961-ன் படி உரிய நபர்களால், உரிய நபர்களின் வருவாய் ஆதாரத்திலிருந்து குறிப்பிட்ட விழுக்காடு தொகையை முன்கூட்டியே வருமான வரியாகப் பிடித்தம் செய்வதாகும்.  அஞ்சலகங்களில் கிடைக்கும் இந்த திட்டமானது 31.03.2025 வரை செயலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட வெறும் பத்தே நாட்களில் சென்னை மாநகரில் மட்டும் கிட்டத்தட்ட 840 கணக்குகள் தொடங்கப்பட்டு, சுமார் ரூ.11.72 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக அறிக்கைகள் கூறுகிறது.

மேலும் படிக்க | ரயில்வே ஸ்டேஷன் ஒன்று... ஆனால் மாநிலங்கள் இரண்டு... இந்தியாவின் வினோத ரயில் நிலையம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News