Mahila Samman Savings Certificate: மத்திய அரசு பல தரப்பட்ட மக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில், பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குழந்தைகள், முதியவர்கள் அல்லது இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பினருக்கும் ஏற்ற வகையில், தபால் அலுவலகம் மூலம், மத்திய அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சிறப்பு திட்டங்கள் மூலம் சிறுசேமிப்பின் பலனை பெற்று பெரும் நிதியை சேமிக்க முடியும். அந்த வகையில், பெண்களுக்காக பல சிறந்த அஞ்சல் அலுவலக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம். இதில் குறுகிய கால முதலீட்டில் பெரும் வட்டி கிடைக்கும். இதில் முதலீடு செய்யும் முறை மற்றும் அதன் அளப்பரிய நிதி பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
முதலீட்டிற்கு 7.5% வட்டி
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம், அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படும் பெண்களுக்கான சிறப்புத் திட்டம். சிறந்த வட்டி கிடைக்கும் அரசுத் திட்டங்களில் இது அடங்கும். பெண்கள் குறுகிய காலத்திற்கு இதில் முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்டலாம். இதில் கிடைக்கும் வட்டியை பொறுத்தவரை, அரசாங்க திட்டத்தில் முதலீட்டிற்கு 7.5 சதவீதம் வரை வட்டி அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் கூட்டு வட்டியின் பலனை பெறலாம்.
பெண்களுக்கான சிறந்த சிறு சேமிப்பு திட்டம்
மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தின் கீழ், பெண்கள் யார் வேண்டுமானாலும் இந்த கணக்கை துவங்கலாம். வயது வரம்பு எதுவும் கிடையாது. 18 வயதுக்கு உட்பட்ட மைனர் பெண் குழந்தைகள் தங்களின் பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் முதலீடு செய்யலாம். 2 ஆண்டு காலத்திற்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ரூ. 2 லட்சம் ஆகும். இந்த திட்டம் 2023ம் ஆண்டில் மத்தியில் நரேந்திர மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலத்தில் தபால் அலுவலகத்தின் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இது உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு
அரசு நடத்தும் தபால் நிலையத் திட்டங்கள் பல பெண்களை தன்னிறைவு பெறச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீட்டிற்கு அதிக அளவாக 7.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கின் பலனையும் பெறலாம்.
மேலும் படிக்க | அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!
மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு
மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி, அதிகபட்சமாக 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீடு 100ன் மடங்குகளில் இருக்க வேண்டும். இதில் கணக்கை துவங்க ஆதார், பான் ஆவணங்கள் முக்கியம். மேலும், இவை இரண்டும் இணைக்கப்பட்டிருப்பதும் அவசியம். இந்த திட்டம் 2025 மார்ச் 31 வரையிலான இரண்டு வருட காலத்துக்கு நடைமுறையில் இருக்கும்.
2 லட்ச ரூபாய்க்கு 30000 ரூபாய் வருமானம்
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் பெறப்பட்ட வட்டியைக் கணக்கிட்டுப் பார்த்தால், இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு முதலீட்டுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, இதில் ஒரு பெண் முதலீட்டாளர் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், முதல் ஆண்டில் முதல் வருடத்திற்கான வட்டித் தொகை ரூ. 15,000 நிலையான வட்டி விகிதத்தில் கிடைக்கும். அடுத்த ஆண்டில் கூட்டு வட்டி முறையில் கிடைக்கும் வட்டி ரூ. 16,125 ஆகிறது. அதாவது, இரண்டு ஆண்டுகளில், வெறும் ரூ.2 லட்சம் முதலீட்டின் மொத்த வருமானம் ரூ.31,125 ஆகிவிடும்.
மேலும் படிக்க | தங்கத்தின் விலை குறைவது எப்போது? கிடுகிடுவென விலையேற காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ