அட்டகாசமான அப்டேட்.. அரசு ஊழியர்களுக்கு 3% ஓய்வூதியம் அதிகரிக்கும்! லேட்டஸ்ட் நியூஸ்

Pension Hike Latest Update: ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 11, 2023, 11:30 AM IST
  • ஓய்வூதியகாரர்களின் எதிர்ப்பார்ப்பு நனவாகிறது
  • தமிழ்நாட்டில் ஓய்வூதியம் அதிகரிக்கிறது
  • அகவிலைப்படி அதிகரித்தால் சம்பளம் எவ்வளவு உயரும்?
அட்டகாசமான அப்டேட்.. அரசு ஊழியர்களுக்கு 3% ஓய்வூதியம் அதிகரிக்கும்! லேட்டஸ்ட் நியூஸ் title=

சென்னை: அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3% உயர்த்தப்பட இருக்கும் நிலையில் யார் யாருக்கு இது பொருந்தும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூலை மாதத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

தற்போது ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2024 முதல் ஓய்வூதியம்

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியம் 3 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இந்த ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாகவே அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

இந்த ஓய்வூதியத்தை 2023 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர்களும், ஓய்வூதிய விண்ணப்பத்திற்கு சமர்ப்பித்தவர்களும், ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வருபவர்களும் பெற்று பயனடையலாம்.

மேலும் படிக்க | தொலைந்த போன ரேஷன் கார்டு திரும்ப பெறுவது எப்படி

ஓய்வூதியதாரர்களின் போர்ட்டலின்படி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான டிஆர் தொகையானது அதற்கு முன்னர் உள்ள ஆண்டுகளின் டிசம்பர் மாதத்திற்கான டிஆர் விகிதங்களின்படி கணக்கிடப்படுகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான டிஆர் ஜூன் மாத டிஆர் விகிதங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 

ஓய்வூதியதாரகளின் போரட்டலில் ஜனவரி-பிப்ரவரி மற்றும் ஜூலை-ஆகஸ்ட் ஆகிய மாதங்களுக்கான டிஆர் நிலுவை தொகையானது வழக்கமாக ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கான பலன்களை விரைவாக வழங்குவதை உறுதிசெய்வதற்கும் ஓய்வூதியதாரர்கள் குறைகளைத் தீர்ப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்டது, ஓய்வூதிய இயக்கம். ஓய்வூதியம் பெறத் தகுதி பெறுவதற்குக் குறைந்தபட்ச20 ஆண்டுகள் ஆறு மாதம் பணி புரிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 25 வயதாகும் வரை மாத ஓய்வூதியம்: குழந்தைகளின் நலன் காக்கும் EPFO திட்டம்

அரசுப் பணியாளர்கள் பணியில் இருக்கும் பெற்ற ஊதியத்தில் 50 சதவிகிதம் அல்லது இறுதிப் பத்து மாதப் பணிக்காலத்தில் பெற்ற சராசரி ஊதியத்தில் 50 சதவிகிதம், இதில் எது அதிகமோ, அதன் அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடப்படும். 2017 அக்டோபர் 1-ம் தேதி முதல் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் 7,850 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

80 வயது அதற்கு மேற்பட்ட வயதை அடைந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வயதிற்கேற்ப அடிப்படை ஓய்வூதியம், அடிப்படை குடும்ப ஓய்வூதியத்தில் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் உள்ளாட்சி அமைப்புப் பணியாளர்களுக்கும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு அளிக்கப்படுவது போன்றே ஓய்வுக் காலப் பயன்கள் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஊதிய திருத்தம் செய்யப்படும்போது, பணியில் உள்ள அரசுப் பணியாளர்களுக்கு இணையாக ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி அதிகரித்து வருவதால், மத்திய மாநில அரசுகளுக்கு செலவினம் மிகவும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | பிஎஃப் தொகைக்கும் வரி உண்டு தெரியுமா? எவ்வளவு? இதற்கான விதி என்ன? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News