OPS vs NPS: உங்களுக்கு ஏற்ற ஓய்வூதிய திட்டம் எது? எதில் அதிக நன்மைகள் உள்ளன?

Old Pension Scheme vs National Pension Scheme : 2004 இல் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய ஓய்வூதிய திட்டம் ( NPS), பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக (OPS) அமல்படுத்தப்பட்டது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 5, 2023, 06:22 PM IST
  • என்பிஎஸ் திட்டத்தின் நன்மைகள் என்ன?
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன?
  • இரண்டில் எது அதிக நன்மை பயக்கும்?
OPS vs NPS: உங்களுக்கு ஏற்ற ஓய்வூதிய திட்டம் எது? எதில் அதிக நன்மைகள் உள்ளன? title=

Pension Scheme: மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் ஒரு முக்கியமான உயிர்நாடியாகும். இது பணி ஓய்வுக்கு பிறகு அவர்கள் வசதியாக வாழ வழி வகுக்கிறது. குறிப்பாக சாமானியர்களுக்கு, ஓய்வூதியம் ஒரு முக்கிய நிதி உதவியாக செயல்படுகிறது. பணி ஓய்வுகாலம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த காலத்தில் நம்மை முதுமை ஆட்கொள்வதால், நம்மால் இளமை காலங்களில் இருப்பது போல மன மற்றும் உடல் திடத்துடன் இருக்க முடியாது. ஆகையால், ஒய்வுகாலத்திற்கான திட்டங்களை வகுத்து அதற்கான ஏற்பாடுகளை முன்னரே செய்ய வேண்டியது அனைவரது கடமையுமாக உள்ளது. இந்த சூழலில், தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஒரு மதிப்புமிக்க முதலீட்டு விருப்பமாக கருதப்படுகின்றது. 

2004 இல் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய ஓய்வூதிய திட்டம் ( NPS), பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக (OPS) அமல்படுத்தப்பட்டது. இது அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய அமைப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில், இது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கிடைத்தது, ஆனால் பின்னர் அதன் வரம்பு விரிவுபடுத்தப்பட்டது. என்பிஎஸ் ஓய்வூதியத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல் முதலீட்டு வாய்ப்புகளையும் வழங்குகிறது. இது ஒரு நிலையான ஓய்வூதியத் தொகைக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றாலும், முதலீடுகளில் அதிக வருமானம் ஈட்டும் சாத்தியம் இதில் உள்ளது.

NPS இரண்டு அடுக்குகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது

NPS, அடுக்கு ஒன்று மற்றும் அடுக்கு இரண்டு கணக்குகள் என இரண்டு அடுக்குகளாக அதாவது டயர்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் டயர் 1 ஐ தேர்ந்தெடுத்தால், அவர் ஓய்வு பெற்ற பிறகு மட்டுமே பணத்தை எடுக்க முடியும். அதேசமயம் டரய் 2 -ஐ தேர்ந்தெடுக்கும் ஊழியர்கள் ஓய்வுக்கு முன்னரே (premature withdrawals) பணம் எடுக்க முடியும். NPS இல் முதலீடு செய்வது வருமான வரிச் சட்டத்தின் 80 CCD இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளை வழங்குகிறது. NPS கார்பஸில் 60 சதவிகித பணம் வித்ட்ரா செய்யப்பட்டால், அதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இது ஓய்வூதிய திட்டமிடலுக்கான ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக அமைகிறது. இதில் மொத்தமாக ஒரு கணிசமான தொகையை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. 

தேசிய ஓய்யூதிய  திட்டமான NPS -இல் சில குறைபாடுகளும் உள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதில் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து தொகை கட்டாயமாக கழிக்கபடுகின்றது. ஓய்வுக்குப் பின் பெறப்படும் நிதிகள் வரிவிதிப்புக்கு உட்பட்டவை. மேலும், டயர் 1 -ஐத் தேர்ந்தெடுத்த நபர்கள் 60 வயதை அடையும் வரை நிதியை திரும்பப் பெற முடியாது.

பழைய ஓய்வூதிய திட்டம்

1950 களில் நிறுவப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இத்திட்டத்தின் கீழ், பணியாளர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை மாதாந்திர ஓய்வூதியமாக அகவிலைப்படியுடன் பெற்றனர். NPS போலன்றி, இந்த திட்டத்தின் மூலம் பெறப்பட்ட வருமானம் வரி இல்லாதது.

மேலும் படிக்க | 7th Pay Commisison ஊழியர்களுக்கு ஜாக்பாட்: இந்த தேதியில் அறிவிப்பு.. எகிறப்போகும் டிஏ

என்பிஎஸ் திட்டத்தின் நன்மைகள் (National Pension Scheme Benefits)

என்பிஎஸ் -இன் கீழ், வருமான வரித் துறையின் பிரிவு 80C மற்றும் 80CCD இன் கீழ் வரி விலக்கு கோரலாம்.

என்பிஎஸ் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஓய்வூதிய நிதிகள் மற்றும் முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் (Old Pension Scheme Benefits)

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (ஓபிஎஸ்) கீழ், 2004 ஆம் ஆண்டுக்கு முன், அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்தை வழங்கியது. இந்த ஓய்வூதியமானது பணியாளரின் ஓய்வு நேரத்தில் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது. இது 2004 இல் மூடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், பணியாளர்கள் ஓய்வு பெறும் போது அவர்களது சம்பளத்தில் பாதி ஓய்வூதியமாக வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தில், பணி ஓய்வுக்குப் பின் இறந்தால், அவரது மனைவிக்கு ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.

ஓய்வூதியத்திற்காக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து அரசு எந்தக் குறைப்பையும் செய்வதில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தில், ஓய்வு பெறும் போது, ​​ஊழியர்களின் கடைசி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதம் அதாவது பாதித் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பணி ஓய்வுக்குப் பிந்தைய மருத்துவக் கொடுப்பனவு மற்றும் மருத்துவக் கட்டணங்களுக்கான தொகையும் பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில், ஓய்வு பெற்ற ஊழியருக்கு, 20 லட்சம் ரூபாய் வரை கிராஜுவிட்டி வழங்கப்படுகிறது.

OPS vs NPS: இரண்டில் எது அதிக நன்மை பயக்கும்?

ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், பழைய ஓய்வூதியத் திட்டம் பாதுகாப்பான திட்டமாகும். இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. இதில் நீங்கள் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்யும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பெறப்பட்ட தொகை உங்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | அதிக லாபம் பெற்று முதல் இடம் பிடிக்கும் பார்தி ஏர்டெல்! மற்றுமொரு சாதனையும் தொடர்கிறது

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News