மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோ

Old Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கும் பல மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 21, 2024, 07:34 PM IST
  • OPS vs NPS: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
  • தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம்?
  • பழைய ஓய்வூதியத்திற்கான தகுதி என்ன?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோ title=

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும், கடைசியாக பெற்ற ஊதியத்தில் பாதி அளவு தொகையை ஓய்வூதியமாக வழங்கும் திட்டமாகும். பழைய ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களின் வாழ்நாள் வருமானத்திற்கு உத்தரவாதமாக அமைகிறது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கும் (Central Government Employees) பல மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. ஒப்பீட்டளவில் இதில் உள்ள நன்மைகள் குறைவாகும். எனினும், இந்த திட்டத்தில் திருத்தங்களை செய்து ஊழியர்களுக்கான நன்மைகளை அதிகரிக்க அரசாங்கம் ஒரு குழுவை அமைத்து அதற்கான பணிகளை செய்து வருகிறது. இதற்கிடையில் பல மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. 

உத்தராகண்ட் மாநிலத்தின் உயர்கல்வித் துறை கல்லூரி முதல்வர்களுக்கு பழைய ஓய்வூதிய பலனை வழங்குவதற்கான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக சமீபத்திய புதுப்பிப்புகள் தெரிவிக்கின்றன. உத்தராகண்ட் (Uttarakhand) மாநிலத்தில், கல்லூரிகளில் முதல்வராக நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், தற்போது ஓய்வு பெறும் தருணத்தில் உள்ளவர்களுக்கும் அரசும், உயர்கல்வித் துறையும் ஒரு நல்ல செய்தியை வழங்கவுள்ளன. 

பழைய ஓய்வூதியத்திற்கான தகுதி

உத்தரகாண்ட் உயர்கல்வித் துறை அனைத்து ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை வழங்கப் போவதில்லை. இதை பெற சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அந்த தகுதிகளின் அடிப்படையில் விவரங்கள் சரியாக இருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் வழங்கப்படும்.

மேலும் படிக்க | நகைக்கடன் பெறுவதில் இனி சிக்கல்: ஆப்பு வைத்த ஆர்பிஐ, விவரம் இதோ

6000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன் பெறுவார்கள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 6000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது, இதை பெற இந்த ஆசிரியர்கள் அனைவரும் தங்களது விவரங்களை குறிப்பிட்ட காலத்தில் உயர்கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லுாரி முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்த ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme in Tamil Nadu)

தமிழ்நாட்டிலும் மாநில அரசு ஊழியர்களும் பல்வேறு தொழிற்சங்கங்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இது குறித்து அறிவிக்கப்படும் என வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசாங்கம் இது குறித்த எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. பிற மாநிலங்கள் தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்காக (State Goverment Employees) மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசுக்கு மட்டும் இது ஏன் சாத்தியப்படவில்லை என்ற கேள்வி ஊழியர்கள் மத்தியில் உள்ளது. 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: அகவிலைப்படியில் அதிரடி உயர்வு      

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News