NPS சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: புதிய வசதி அறிமுகம்.. இனி UPI மூலமே டெபாசிட் செய்யலாம்

NPS Update: என்பிஎஸ் -இல் (NPS) முதலீடு செய்யும் சந்தாதாரர்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) QR குறியீடு மூலம் முதலீடு செய்ய PFRDA அனுமதித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 21, 2023, 03:50 PM IST
  • என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு புதிய வசதி.
  • UPI QR குறியீடு மூலம் முதலீடு செய்யலாம்.
  • NPS இல் பணத்தைப் போட வேறு என்ன வழிகள் உள்ளன?
NPS சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: புதிய வசதி அறிமுகம்.. இனி UPI மூலமே டெபாசிட் செய்யலாம் title=

NPS Update: NPS சந்தாதார்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டாளரான பிஎஃப்ஆர்டிஏ (PFRDA) ஒரு புதிய வசதியை தொடக்கியுள்ளது. என்பிஎஸ் -இல் (NPS) முதலீடு செய்யும் சந்தாதாரர்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) QR குறியீடு மூலம் முதலீடு செய்ய PFRDA அனுமதித்துள்ளது. PFRDA இன் அறிக்கையில், முதலீட்டு செயல்முறையை எளிதாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், என்பிஎஸ் கணக்குகளைத் திறக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த அமைப்பு இன்னும் எளிதாகவும் சிறப்பாகவும் மாறிவிடும்.

UPI QR குறியீடு மூலம் முதலீடு செய்யலாம்

NPS நீண்ட காலமாக தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பும் மக்களுக்கு நம்பகமான சேமிப்புக் கருவியாக இருந்து வருகிறது. PFRDA இன் இந்த முயற்சி என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு (NPS Subscribers) அவர்களின் ஓய்வூதிய சேமிப்புகளை கட்டுப்படுத்தவும், முறையான முதலீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடையவும் தேவையான வசதியையும் அதிகாரத்தையும் அளிக்கிறது என்று PFRDA கூறியுள்ளது. புதிய அமைப்பின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் பங்களிப்பை மாற்ற UPI QR குறியீட்டைப் பயன்படுத்த முடியும்.

தற்போது, ​​சந்தாதாரர்கள் டி-ரெமிட்டைப் பயன்படுத்தி தங்கள் வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக முதலீடு செய்ய வசதி வழங்கப்பட்டுள்ளது. டி-ரெமிட் ஐடி 15 இலக்கங்களைக் கொண்டுள்ளது, இது வாடிக்கையாளரின் சேமிப்பு வங்கிக் கணக்கிலிருந்து தன்னார்வ பங்களிப்பை மாற்றும் போது இணைய வங்கியில் பயனாளியாக சேர்க்கப்பட வேண்டும். பிஎஃப்ஆர்டிஏ வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, டி-ரெமிட் விருப்பம் முதலீட்டாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை, சுமார் 10 லட்சம் வெவ்வேறு டி-ரெமிட் ஐடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | OPS: பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா? நாட்டின் நிதி நிலை என்ன?

என்பிஎஸ் சந்தாதாரர்கள் டீ-ரெமிட் (D-Remit) அடிப்படையிலான விரைவு பதில் (க்யூஆர்) குறியீடு மூலம் என்பிஎஸ் கணக்கில் முதலீடு செய்யலாம். வாடிக்கையாளர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து UPI-இயக்கப்பட்ட எந்த செயலியையும் பயன்படுத்தி முதலீடு செய்யலாம். QR குறியீடு (QR Code) ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வித்தியாசமாக இருக்கும். பணம் செலுத்த இதை ஆஃப்லைனில் சேவ் செய்துகொள்ளலாம். டயர் I மற்றும் டயர் II -க்கு QR குறியீடுகள் வேறுபட்டு இருக்கும் என PFRDA சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NPS இல் பணத்தைப் போட வேறு என்ன வழிகள் உள்ளன?

என்பிஎஸ் முதலீட்டாளர் திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்ய இன்னும் பல முறைகள் உள்ளன. NPS இன் eNPS தளத்திற்கு சென்று ஆன்லைனில் உங்கள் பங்களிப்பைச் செய்யலாம். இது தவிர, நீங்கள் NPS மொபைல் செயலி மூலமாகவும் பணம் செலுத்தலாம். பங்களிப்பு செய்யும் போது, டெபிட் கார்டு மூலம் அதிகபட்சமாக ரூ.2,000 வரை செலுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். டயர்-1 கணக்கிற்கு குறைந்தபட்சம் ரூ.500 மற்றும் டயர்-2 கணக்கிற்கு ரூ.250 டெபாசிட் செய்யலாம்.

நிதி மேலாளர்களின் தேர்வு

சமீபத்ததில் ஓய்வூதியக் கட்டுப்பாட்டாளர் PFRDA மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி, முதலீட்டாளர்கள் வெவ்வேறு அசெட் வகுப்புகளுக்கு (அசெட் க்ளாஸ்) மூன்று ஓய்வூதிய நிதி மேலாளர்களைத் தேர்வு செய்யலாம். இதுவரை என்பிஎஸ் (NPS) சந்தாதாரர்களுக்கு பல நிதி மேலாளர்களைத் (Multiple Fund Managers) தேர்ந்தெடுக்கும் வசதி இல்லை. சந்தாதாரர் ஒரு ஓய்வூதிய நிதி மேலாளரைத் தேர்ந்தெடுத்ததும், என்பிஎஸ் -இன் வெவ்வேறு அசெட் வகைகளில் முதலீடு செய்யப்பட்ட பணம் அந்த நிதி மேலாளரால் நிர்வகிக்கப்பட்டது. அதாவது, ஒரே நிதி மேலாளர் அனைத்து அசெட்களையும் நிர்வகித்தார். ஆனால் இப்போது சந்தாதாரர்கள் ஒவ்வொரு அசெட் வகுப்பிற்கும் வெவ்வேறு நிதி மேலாளர்களைத் தேர்வு செய்யலாம்.

மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அகவிலைப்படி வடிவில் வரவுள்ள அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News