CGHS New Rules For Central Government Employees: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் உள்ளது. மத்திய அரசின் CGHS கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. சிஜிஎச்எஸ் அட்டைதாரர்களுக்கு அரசு மருத்துவமனையின் அவசர சேவையை பயன்படுத்திக்கொள்வதற்கான விதிகள் முன்பை விட எளிதாகியுள்ளன. இதன் காரணமாக, இனி இவர்கள் எந்தத் தொந்தரவும் இல்லாமல் உடனடியாக சிகிச்சையைத் தொடங்க முடியும்.
சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்கள்
சுகாதார அமைச்சகம் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) அட்டைதாரர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகளை இன்னும் எளிதாக்குவதாக்குவதே இந்த வழிகாட்டுதல்களின் நோக்கமாக உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் (Pensioners) அரசு மற்றும் பட்டியலிடப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனை, நோய் பற்றிய ஆய்வு மற்றும் சிகிச்சைக்கான சிறந்த சேவைகளைப் பெற முடியும். 24 செப்டம்பர் 2024 அன்று இது தொடர்பான அலுவலக குறிப்பேடு (OM) வெளியிடப்பட்டது. இதில் சுகாதார அமைச்சகம் பரிந்துரை தொடர்பான பழைய விதிகளை மாற்றி புதிய விதிகள் தொடர்பான நிலையான செயல்பாட்டு செயல்முறையை (SOP) வெளியிட்டுள்ளது.
Central Government Employees: அவசரகால சேவைகளுக்கான புதிய CGHS விதிகள்
- அவசரநிலைகளின் போது, இனி சுகாதார அமைப்புகள் (HCOs) CGHS இலிருந்து பரிந்துரை அல்லது ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை. அவர்கள் நேரடியாக பணமில்லாமல் சிகிச்சை செய்யலாம்.
- எனினும், சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையின் நிபுணரிடம் இருந்து நோயாளி அவசரநிலை சான்றிதழைப் பெற வேண்டும்.
- இந்த சான்றிதழுடன், மருத்துவமனை BCA போர்ட்டலில் சிகிச்சைக்கான க்ளெய்மை பதிவேற்றும்.
- அவசர சிகிச்சைக்கான CGHS பட்டியலில் அந்த பரிசோதனை அல்லது சிகிச்சை இல்லாவிட்டாலும், பரிந்துரை தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
- NHA போர்ட்டல் மூலம் மருத்துவமனை இதற்கான அனுமதியைப் பெறலாம்.
- உள்ளூர் CGHS அலுவலகத்திலிருந்து எந்த அனுமதியும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பரிந்துரை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இனி CGHS மூலம் பெறப்படும் கலந்தாய்வு குறிப்புகள் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும். CGHS மருத்துவ அதிகாரி ஒருவர், நோயாளியை ஒரு நிபுணரிடம் பரிந்துரைத்தால், அந்த நிபுணரிடம் மூன்று மாதங்களுக்குள் அதிகபட்சம் ஆறு முறை ஆலோசனை பெறலாம். முதன்மை ஆலோசகரின் அறிவுறுத்தலின் பேரில், நோயாளி, இரண்டு கூடுதல் நிபுணர்களிடமிருந்தும் ஆலோசனையைப் பெற முடியும். எனினும், இந்த விதிகள் CGHS மருத்துவ அதிகாரிகளால் வழங்கப்படும் பரிந்துரைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு மருத்துவமனைகளின் பரிந்துரைகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது.
70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு விலக்கு
70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு எந்த நிபுணரிடமும் ஆலோசனை பெற எந்த வித பரிந்துரையும் தேவையில்லை. இந்தப் பயனாளிகள் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட அனைத்து நோய் விசாரணை அல்லது செயல்முறைகளுக்கும் நேரடி சிகிச்சையைப் பெற அனுமதிக்கப்படுவார்கள். எனினும், CGHS பட்டியலில் இல்லாத சோதனை அல்லது நடைமுறைகளுக்கு CGHS அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
குறிப்பிட்ட நோய்களுக்கான ஃபாலோ அப் விதிகள்
சில குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட பயனாளிகள், முதன்மை பரிந்துரையின் அடிப்படையில் எந்த நேர வரம்பும் இன்றி ஃபாலோ அப் ஆலோசனை மற்றும் விசாரணைகளைப் பெற அனுமதிக்கப்படுவார்கள். அந்த நோய்களில் கீழ்வரும் நோய்களும் அடங்கும்:
- போஸ்ட் கார்டியாக் சர்ஜரி நோயாளிகள்.
- உறுப்பு மாற்று செய்துகொண்ட நோயாளிகள்
- நரம்பியல் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள்
- இறுதி நிலை சிறுநீரக நோய்
- புற்றுநோய் சிகிச்சை
- ஆட்டோ இம்யூன் கோளாறுகள்
- நரம்பியல் கோளாறுகள்
இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை அல்லது நோய் அறிதல் விஷயங்களுக்கான அடிக்கடி பரிந்துரைகளை பெற வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ