பான்-ஆதார் இணைப்பு: பான் மற்றும் ஆதார் இரண்டும் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஆவணங்களாக உள்ளன. இவை நம்மிடம் இல்லை என்றால் பல வகையான சிரமங்களை சந்திக்க நேரிடும். பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் ஆதார் இணைப்பு: புதுப்பிப்பு
இந்த தேதிக்குள் இரண்டு ஆவணங்களும் இணைக்கப்படாவிட்டால், ஜூலை 1 ஆம் தேதி பான் கார்டு முடக்கப்படும். பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு 1000 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். இதற்கிடையில், பான் ஆதார் இணைப்பு குறித்த ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான படிவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் போது, மதிப்பீட்டு ஆண்டு (AY) என்ற விருப்பம் உள்ளது. வருமான வரித்துறை தற்போது மதிப்பீட்டு ஆண்டை புதுப்பித்துள்ளது. தாமதக் கட்டணத்தைச் செலுத்த 2024-25 மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முன்னதாக காலக்கெடு 31 மார்ச் 2023 ஆக இருந்தது. ஆகையால் முன்னர் 2023-24 மதிப்பீட்டு ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.
பான் ஆதார் இணைக்கவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படும்
இந்த நிலையில், கடைசி தேதிக்குள் பான் ஆதாரை இணைக்காவிட்டால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும், அதன் காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படாது என்றும் நிதி அமைச்சகம் கூறுகிறது. பான் அதாரை இணைக்காத நபர்களுக்கு, ஜூலை 1 முதல் பான் கார்டு இருந்தும் எந்த பயனும் இல்லை. பான் கார்ட் பயனற்று போனால், கார்டு வைத்திருப்பவர்கள் மியூசுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தை முதலீடுகள் போன்றவற்றைச் செய்ய முடியாது. வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் பான் கார்டு அவசியமாகும். வீடு, நிலம் வாங்க விரும்பினாலோ நிதி ஒப்பந்தங்களில் ஈடுபட்டாலோ, அனைத்து இடங்களிலும் பான் கார்ட் அவசியம். இது இல்லாமல், பல வகையான சிரமங்களை சந்திக்க நேரிடும்.
பான் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எப்படி அறிவது?
- உங்கள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் உள்ளதா?
- இதை அறிய வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- இணையதளத்தில் ‘வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் ஒரு செய்தி உங்கள் முன் தோன்றும்.
- இதன் மூலம் உங்கள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.
மேலும் படிக்க | PAN Card Big Alert: இந்த சிறிய தவறுக்கு ரூ. 10,000 அபராதம்... இப்படி சரி செய்யலாம்
பான் ஆதார் இணைப்பு: இதை செய்வது எப்படி?
- பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது மிகவும் எளிதானது.
- இதற்கு நீங்கள் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.incometaxindiaefiling.gov.in க்குச் செல்ல வேண்டும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள ‘விரைவு இணைப்புகள்’ (‘Quick Links’) பகுதிக்குச் செல்லுங்கள்.
- அங்கு ஆதார் இணைப்பு விருப்பத்தைக் ( Link Aadhaar option) கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, ஒரு புதிய சாளரம் திறக்கும்.
- இங்கே நீங்கள் உங்கள் பான் எண், ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP கிடைக்கும்.
- அதன் பிறகு Validate என்பதைக் கிளிக் செய்யவும்.
- அபராதம் செலுத்திய பிறகு, உங்கள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ