மிடில் கிளாஸ் மக்களுக்கு... இந்த பட்ஜெட்டில் கிடைத்த பலன்கள் என்ன? - முக்கிய பாயின்ட்கள் இதோ!

Budget 2024: நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்ததா இல்லையா என்பது குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 23, 2024, 04:54 PM IST
  • பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
  • புதிய வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் வந்துள்ளன.
  • பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் இல்லை.
மிடில் கிளாஸ் மக்களுக்கு... இந்த பட்ஜெட்டில் கிடைத்த பலன்கள் என்ன? - முக்கிய பாயின்ட்கள் இதோ! title=

Budget 2024, Major Announcement For Middle Class: மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், மாணவர்கள், தொழில்துறையினர், இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள், முதலீட்டாளர்கள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த பட்ஜெட்டில் தங்களுக்கான பலன்களை எதிர்பார்த்திருந்தனர். 

ஏறத்தாழ பல தரப்பின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இன்றைய பட்ஜெட்டில் இடம்பெற்ற பல அறிவிப்புகள், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் என்றும் அதனை அப்பட்டமாக காப்பி அடித்துள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க வரி செலுத்தும் மிடில் கிளாஸ் மக்களும் இந்த பட்ஜெட்டை கூர்ந்து கவனித்து வந்தனர். அந்த வகையில், நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்ததா இல்லையா என்பது குறித்து இதில் காணலாம். அதற்கு முன், இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த நடுத்தர வர்க்கத்தினருக்கான ஐந்து முக்கிய அறிவிப்புகளை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | Budget 2024: முடிந்தது பட்ஜெட் தாக்கல்.... எவற்றின் விலை உயர்ந்தது? எவை விலை குறைந்தது?

5 முக்கிய அறிவிப்புகள்

- ஓய்வூதியம் பெறுவர்களுக்கு சிறப்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகியிருந்தது. குடும்ப ஓய்வூதியத்திற்கான பிடித்தம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆபத்து காலத்தில் நிவாரணம் அளிக்கும். ஓய்வுக்கு பின்னர் அவர்கள் இதனால் கவலைப்பட தேவையில்லை. 

- பல்வேறு விலக்குகள் கொண்ட பழைய ஓய்வூதிய திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, இதை பின்பற்றுபவர்கள் இந்த பட்ஜெட்டின்கீழ், வரிப் பொறுப்புகளில் எந்த மாற்றத்தையும் காண மாட்டார்கள்.

- புதிய வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது முன்பை விட நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் வகையில் வரி அடுக்குகள் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 3 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டும். அடுத்து, ரூ. 3 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை - 5%, ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை 10%, ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை 15%, ரூ. 12 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை 20% வருமான வரி செலுத்த வேண்டும். அதுவே, ரூ.15 லட்சத்திற்கு மேல் 30% வருமான வரி செலுத்த வேண்டும். 

- தற்போது கொண்டுவரப்பட்ட வரி சீர்திருத்தங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அரசாங்க வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றங்களால் நேரடி வரி மூலம் ரூ.29,000 கோடியும், மறைமுக வரி மூலம் ரூ.8,000 கோடியும் என சுமார் ரூ. 37,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இருந்தாலும், கூடுதலாக ரூ.30,000 கோடி வருவாயைத் திரட்ட அரசாங்கம் இதனை செய்துள்ளது எனலாம். 

- சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான பிடிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பின் கீழ் ஊழியரின் நிலையான கழிவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வருமான வரி நிலையான கழிவு அதிகரிப்பதன் மூலம் மக்கள் அந்த பணத்தை சேமிக்கும் வாய்ப்பும் அதிகமாகும்.

இதன்மூலம், நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும் அவர்களை முழுவதுமாக ஏமாற்றாமல் சற்று ஆறுதல் அளித்துள்ளது எனலாம். 

மேலும் படிக்க | Budget 2024: NPS-இல் நல்ல செய்தி... நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்தது, ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News