பெண்களுக்கான சேமிப்பு திட்டம்... வரி விலக்குடன் அசத்தலான வட்டி... வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!

மகிளா சம்மான் சேமிப்பு  திட்டத்தின் கீழ், பெண்கள் யார் வேண்டுமானாலும் இந்த கணக்கை துவங்கலாம்.. வயது வரம்பு எதுவும் கிடையாது. 18 வயதுக்கு உட்பட்ட மைனர் பெண் குழந்தைகள் தங்களின் பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் முதலீடு செய்யலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 3, 2023, 01:29 PM IST
  • பெண்கள் முதலீடு செய்து நல்ல வட்டி வருமானத்தை பெற மிக சிறந்த வாய்ப்பு.
  • மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் யார் எல்லாம் கணக்கைத் திறக்கலாம்?
  • மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு.
பெண்களுக்கான சேமிப்பு திட்டம்...  வரி விலக்குடன் அசத்தலான வட்டி... வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!! title=

தபால் அலுவலகத் திட்டம்:  மத்திய அரசானது, மகளிர் மட்டும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது.  அதில் ஒன்றுதான், "மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்"  (Mahila Samman Savings Certificate) . நாட்டிலுள்ள 1.59 லட்சம் தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளின் முக்கிய கிளைகள் மூலம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.  தபால் அலுவலக திட்டத்தின் கீழ் பெண்கள் 2 ஆண்டுகளில் நல்ல வருமானம் பெறலாம். இந்த அஞ்சலக திட்டத்தில் நீங்களும் முதலீடு செய்தால், ரூ.2 லட்சம் முதலீட்டில் பம்பர் ரிட்டர்ன் பெறலாம். அஞ்சல் அலுவலகத்தின் மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் பெண்கள் முதலீடு செய்து நல்ல வட்டி வருமானத்தை பெற மிக சிறந்த வாய்ப்பு.

மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் யார் எல்லாம் கணக்கைத் திறக்கலாம்?

மகிளா சம்மான் சேமிப்பு  திட்டத்தின் கீழ், பெண்கள் யார் வேண்டுமானாலும் இந்த கணக்கை துவங்கலாம்.. வயது வரம்பு எதுவும் கிடையாது. 18 வயதுக்கு உட்பட்ட மைனர் பெண் குழந்தைகள் தங்களின் பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் முதலீடு செய்யலாம். 2 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இரண்டு ஆண்டுகளில் முதலீட்டுக்கு 7.5 சதவீதம் என்ற நிலையான வட்டி வழங்கப்படும். இதன் மூலம், பெண்கள் எதிர்காலத்திற்கான பணத்தை திட்டமிட்டு சேமிக்கவும், நிதி நிலை வலுவாக இருப்பதால் தன்னம்பிக்கை பெறவும் முடியும். இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கும் அரசு வரிவிலக்கு அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் அனைத்துப் பெண்களுக்கும் வரிச் சலுகை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ், 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களும் தங்கள் கணக்குகளைத் திறக்கலாம்.

மகிளா சம்மான் சேமிப்பு  திட்டத்தின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு 

மகிளா சம்மான் சேமிப்பு  திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி, அதிகபட்சமாக 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டை 100ன் மடங்குகளில்  செய்ய வேண்டும். டெபாசிட்டை துவங்க ஆதார், பான் ஆவணங்கள் முக்கியம்.. இவை இரண்டுமே இணைக்கப்பட்டிருப்பதும் அவசியம். இந்த திட்டம் 2025 மார்ச் 31 வரையிலான இரண்டு வருட காலத்துக்கு நடைமுறையில் இருக்கும்.

2 வருடத்தில் இவ்வளவு வட்டி கிடைக்கும்

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தில் அஞ்சலகம் வழங்கும். உதாரணமாக, ஒரு முறை ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், முதல் ஆண்டில் ரூ.15,000 மற்றும் இரண்டாவது ஆண்டில் ரூ.16,125 லாபம் கிடைக்கும். அதாவது இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சம் முதலீட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.31,125 பலன் கிடைக்கும்.

வரி விலக்குடன் பெண்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும்

மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தின் வருமான வரி விலக்கின் நன்மையை பெறலாம், அனைத்து தபால் நிலையமும் இயக்கி வருகிறது. தபால் அலுவலக மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், பெண்கள் எந்தவிதமான சந்தை அபாயத்தையும் சந்திக்க வேண்டியதில்லை. இதில் உங்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும்.

Trending News