இந்திய மக்கள் பலரும் நம்பிக்கையுடன் காலம்காலமாக லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி)-ல் முதலீடு செய்து வருகின்றனர். இந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் குறைந்த தொகையை நீங்கள் முதலீடு செய்து அதிக லாபத்தை பெற்றுக்கொள்ள முடியும், ஒவ்வொரு மாதமும் ரூ.500 என சிறிய அளவில் கூட இதில் பாலிசிதாரர் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு நாளும் நீங்கள் ரூ.75 முதலீடு செய்வதன் மூலம் திட்டத்தின் முடிவில் பெரிய பலனை பெறலாம், எல்ஐசி தனது எண்டோமென்ட் பாலிசியில் அடிக்கடி சில மாற்றங்களையும், திருத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது. எல்ஐசியின் புதிய எண்டோமென்ட் திட்டம் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு பண்புகளின் கவர்ச்சிகரமான கலவையாகும்.
மேலும் படிக்க | பான் கார்டு & பே ஸ்லிப் இல்லாமல் தனிநபர் கடன் பெறுவது எப்படி?
எல்ஐசியின் புதிய எண்டோமென்ட் திட்டம் தனிநபர் வாழ்க்கைக்கு சிறந்த உத்தரவாதத்தை தரக்கூடிய திட்டமாகும். திட்டத்தின் முதிர்ச்சியில் பாலிசிதாரர் மிக பெரிய மொத்தத் தொகையைப் பெறுகிறார்கள் மற்றும் இந்த திட்டத்தில் பங்களிக்கும் பாலிசிதாரர் இறந்துவிடும் பட்சத்தில் அவரது குடும்பத்திற்கு நிதி உதவி கிடைக்கப்பெறும், மேலும் இந்த திட்டத்தில் நிதி சிக்கல்களை சமாளிக்க கடன் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 8 வயது முதல் அதிகபட்சமாக 75 வயது வரை சேர்ந்து கொள்ளலலாம்.
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச பாலிசி விதிமுறைகள் முறையே 12 மற்றும் 35 ஆண்டுகள் ஆகும். இதில் 15 ஆண்டு காப்பீட்டுக்கான குறைந்தபட்ச வருடாந்திர பிரீமியம் ரூ. 6,978 ஆகவும், 25 வருட பாலிசி காலத்திற்கு ரூ.3,930 ஆகவும், 35 வருட பாலிசி காலத்திற்கு ரூ.27,54 ஆகவும் இருக்கும். 20 வயதில் யாராவது இந்த பாலிசியை மொத்தமாக உறுதி செய்து வாங்கினால் ரூ. 1 லட்சம் செலுத்த வேண்டும். உங்கள் குழந்தை 8 வயத்துக்குட்பட்டவராக இருந்தால் இந்த கவரேஜை பெற்றோர் பெயரில் வாங்கலாம். இந்த பாலிசி மாதாந்திர, அல்லது வருடாந்திரம் போன்ற நீண்ட காலத்திற்கு சிறிய தொகையை முதலீடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ்; சம்பளத்தில் பம்பர உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ