LIC’s New Jeevan Shanti Plan 2023: எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆனது புதிய ஜீவன் சாந்தி திட்டத்திற்கான வருடாந்திர விகிதங்களை சிறப்பான முறையில் மேம்படுத்தி இருக்கின்றது. ஜனவரி 5-ம் தேதி முதல் எல்ஐசி நிறுவனத்தின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் புதிய பாலிசிதாரர்கள், மேம்படுத்தப்பட்ட வருடாந்திர விகிதத்தைப் பெறுவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதிக கொள்முதல் விலைக்கான புதிய திட்டத்தின் ஊக்கத்தொகையானது இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களுக்கான ரிவார்டுகள் இப்போது வாங்கும் விலையின் ரூ.1,000க்கு ரூ.3 முதல் ரூ.9.75 வரை இருக்கும். அதேசமயம் போனஸ் ஆனது கொள்முதல் விலை மற்றும் ஒத்திவைப்பு காலத்தைப் பொறுத்தது.
மேலும் படிக்க | Income Tax: 7 அடுக்குகள் கொண்ட வரிவசூல் முறை, முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்
இந்த திட்டத்தில் பாலிசிதாரர்களுக்குக் கிடைக்கும் இரண்டு வகையான ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதில் ஒன்று ஒற்றை வாழ்க்கை, மற்றொன்று கூட்டு வாழ்க்கை ஆகும். இந்த புதிய ஜீவன் சாந்தி திட்டத்தில் வேலையில் இருப்பவர்கள் அல்லது சுயதொழில் புரிபவர்கள், எதிர்காலத்தில் வருமானம் பெற விரும்பும் வல்லுநர்கள் போன்ற அனைத்து தரப்பினரும் பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். இதுதவிர ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து வருமானத்தை பெறுவதற்காக கையில் பெரியளவு தொகையை வைத்திருப்பவர்களும் இந்த திட்டடத்தில் பங்காளிக்கலாம்.
புதிய ஜீவன் சாந்தி தாமதமான வருடாந்திரத் திட்டத்தை வழங்குவதால், இந்த திட்டத்தில் இளம் தொழில் வல்லுநர்கள் முன்கூட்டியே ஓய்வூதியத் திட்டங்களை பெறலாம். எல்ஐசியின் மேம்படுத்தப்பட்ட புதிய ஜீவன் சாந்தி திட்டத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 1.5 லட்சம் கொள்முதல் தேவை மற்றும் இந்த திட்டடத்திலிருந்து குறைந்தபட்சம் ஆண்டுத் தொகையாக உங்களுக்கு ரூ.12,000 கிடைக்கும். மேலும் கொள்முதலுக்கு இந்த திட்டத்தில் அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. உதாரணமாக நீங்கள் ஒற்றை வாழ்க்கைக்கான வருடாந்திரத்தைத் தேர்வுசெய்து ரூ.10 லட்சத்திற்கு பாலிசியை வாங்கினால், உங்களுக்கு மாதந்தோறும் ரூ.11,192 ஓய்வூதியமாக கிடைக்கும்.
மேலும், எல்ஐசி ஜீவன் ஆனந்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் மற்றும் இதில் அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. இந்த காப்பீட்டு திட்டத்தில் ரூ.25 லட்சம் பெற விரும்புபவர்கள் தினமும் ரூ.45 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். தினம் ரூ.45 என கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு ரூ.1358 வரும், இந்த தொகையை நீங்கள் 35 ஆண்டுகள் வரையிலும் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் 35 ஆண்டுகால முதிர்விற்கு பிறகு முதலீட்டாளருக்கு ரூ.25 லட்சம் கிடைக்கும்.
மேலும் படிக்க | உங்கள் பான், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை கண்டறிவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ