8வது ஊதியக்குழு: வலுக்கும் கோரிக்கை, அதிகரிக்கும் அழுத்தம், குட் நியூஸ் கொடுக்குமா மத்திய அரசு?

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதிய அளவுகளை உயர்த்தி அவர்களது பொருளாதார சிக்கல்களை தீர்க்க 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 13, 2024, 01:10 PM IST
  • 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு.
  • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய அமைப்பை திருத்த வேண்டும் என கோரிக்கை.
  • 7வது ஊதியக் குழு எப்போது அமலுக்கு வந்தது?
8வது ஊதியக்குழு: வலுக்கும் கோரிக்கை, அதிகரிக்கும் அழுத்தம், குட் நியூஸ் கொடுக்குமா மத்திய அரசு? title=

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். எனினும் இந்த அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதிய அளவுகளை உயர்த்தி அவர்களது பொருளாதார சிக்கல்களை தீர்க்க 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளது.

Confederation of Central Government Employees and Workers

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, தபால் துறை, வருமான வரி, ஏஜி-க்கள், தணிக்கைத் துறை, கணக்கெடுப்புத்துறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜிஎஸ்ஐ, சிபிடபுள்யூ, சிஜிஎஹ்எஸ் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றும் சுமார் ஏழு லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் பிரதிநிதித்துவ கூட்டமைப்பாக உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்புடன் இணைந்த சுமார் 130 சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் இதில் உள்ளன.

மேலும் படிக்க | ஜனவரியில் அகவிலைப்படி 3% அதிகரித்தால், சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு கணக்கீடு இதோ

இந்த கூட்டமைப்பு தனது கடிதத்தில், ஊழியர்களின் ஊதியம் இதற்கு முன்னர் 1-1-2016 முதல் திருத்தப்பட்டது என்றும், 1-7-2024 முதல் அகவிலைப்படி 53 சதவீதத்தை கடந்துள்ளது என்றும் கூறியுள்ளது. 'கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஊதியத்தின் உண்மையான மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று நோய்க்கு பிறகு இது மிகப்பெரியதாகிவிட்டது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Pay Structure: 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய அமைப்பை திருத்த வேண்டும் என கோரிக்கை

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய அமைப்பு திருத்தப்பட வேண்டும் என்று இந்த கூட்டமைப்பு விரும்புகிறது. 'நமது நாட்டில் உள்ள தலைசிறந்த திறமைசாலிகளை ஈர்க்கும் வகையில் மத்திய அரசு பணிகளின் ஊதிய கட்டமைப்பானது கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும். இது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தப்பட வேண்டும். தலைசிறந்த திறமைசாலிகள் அரசு பணிகளுக்கு வந்தால் நல்ல தலைமைத்துவத்தையும் நல்ல நிர்வாகத்தையும் வழங்க உறுதுணையாக இருப்பார்கள்' என்று கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மற்ற தனியார் துறை நிறுவனங்களுக்கு இந்திய அரசு ஒரு முன்மாதிரியாக உள்ளது என்று கூறியுள்ள கூட்டமைப்பு, திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துவதில் ஊழியர்கள் திறம்பட செயல்படும் வகையில் அவர்களை நன்றாக கவனித்துக் கொண்டு அவர்களுக்கு வசதியான வாழ்க்கையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

7th Pay Commission: 7வது ஊதியக் குழு எப்போது அமலுக்கு வந்தது?

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதி குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் (Salary)மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் (Pension) ஆகியவற்றில் திருத்தங்கள் செய்ய ஊதிய குழுவில் முன்மொழியப்படுகின்றது. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் 8வது உதியக்குழு 2026 ஜனவரி 1 அன்று அமலுக்கு வரவேண்டும்.

இதற்கு முந்தைய ஊதியக்குழுக்கள் தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்க சுமார் 2 ஆண்டு காலம் ஆனது என்றும் அதற்குப் பிறகு அரசாங்கம் அதை பரிசீலித்து அமல்படுத்த ஆறு மாதங்கள் ஆனது என்பதையும் கடிதம் சுட்டி காட்டியுள்ளது.

'8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான சரியான தருணம் வந்துவிட்டது. இன்னும் தாமதம் செய்யப்படக்கூடாது. பணவீக்கம் மற்றும் பண மதிப்பு குறைவதன் காரணமாக, நிதி நெருக்கடியில் உள்ள ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நல்ல வாழ்க்கையை நடத்துவதற்கு 8வது ஊதியக்குழுவை அமைப்பது அவசியம். இதன் மூலம் ஊழியர்கள் இன்னும் திறம்பட உழைத்து அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை சீராக செயல்படுத்தி அவற்றின் பலன் சாமானிய மக்களே சரியான தருணத்தில் சென்றடைவதை உறுதி செய்ய முடியும்' என்று கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், 8வது ஊதியக்குழு அமைக்கும் திட்டம் தற்போது அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளார். இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | அகவிலைப்படியை 12 சதவீதம் உயர்த்திய மாநில அரசு! உற்சாகத்தில் ஊழியர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News