உங்கள் தலையணையை எப்போது மாற்ற வேண்டும்? ஏன் அவசியம்

Pillow, Sleep tips | நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் தலையணையை எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்? ஏன் அவசியம்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 12, 2024, 10:54 PM IST
  • தலையணைகளை ஏன் மாற்ற வேண்டும்?
  • அடிக்கடி தலையணை மாற்ற வேண்டிய அவசியம்
  • தலையணைகளால் வரும் பெரும் ஆபத்து
உங்கள் தலையணையை எப்போது மாற்ற வேண்டும்? ஏன் அவசியம் title=

நல்ல தூக்கத்திற்கு தலையணைகள் அவசியம். தலையணைகள் ஒரு நல்ல இரவு தூக்கத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, உங்கள் தலை, கழுத்து மற்றும் தோள்களுக்கு இவை நல்ல ஆதரவை வழங்குகின்றன. இருப்பினும், அவற்றை என்றென்றும் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் காலப்போக்கில், தலையணைகள் குறைவான செயல்திறன் கொண்டதாக மாறும். பழைய தலையணைகள் ஒவ்வாமைகளை குவித்து வைத்திருப்பதுடன் நாற்றங்களும் இருக்கும். இது உங்கள் தூக்கத்தின் தரம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் இரண்டையும் பாதிக்கும். சரியான நேரத்தில் தலையணை மாற்றமானது சிறந்த தூக்க சுகாதாரம், மேம்பட்ட உடல் நலம் மற்றும் தரமான தூக்கத்தை கொடுக்கும். இது ஒவ்வாமை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே தலையணையை அசாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். 

உங்கள் தலையணைகளை ஏன் மாற்ற வேண்டும்?

1 முதல் 2 வருடங்களுக்கு ஒருமுறை உங்கள் தலையணைகளை மாற்ற வேண்டும். இருப்பினும் இது தலையணையின் வகை மற்றும் அது எவ்வளவு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து மாறுபடும். உங்களிடம் இறகு தலையணைகள் இருந்தால், ஒவ்வொரு 1-2 வருடங்களுக்கும் அவற்றை மாற்றவும். இந்த தலையணைகள் காலப்போக்கில் அவற்றின் வடிவத்தையும் பொலிவையும் இழந்து ஆதரவைக் குறைக்கின்றன. நீங்கள் மெமரி ஃபோம் தலையணைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஒவ்வொரு 2-3 வருடங்களுக்கும் அவற்றை மாற்றவும். அவற்றின் ஆயுள் காரணமாக அவை சிறிது காலம் கூடுதலாக பயன்படுத்தலாம். பாலியஸ்டர் தலையணைகள் ஒவ்வொரு 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை மாற்றப்பட வேண்டும். லேடெக்ஸ் தலையணைகள் 2-4 ஆண்டுகள் வரை பயன்படுத்தப்படலாம். 

மேலும் படிக்க | நீங்கள் வசீகரமானவர் என்பதை காட்டும் 5 அறிகுறிகள்! இதெல்லாம் இருக்கான்னு பாருங்க..

தலையணைகளை மாற்றுவதில் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?

காலப்போக்கில், தலையணைகள் உங்கள் உடலில் இருந்து தூசிப் பூச்சிகள், இறந்த சரும செல்கள், வியர்வை மற்றும் எண்ணெய்களை தாங்கி நிற்கும். இவை ஒவ்வாமை மற்றும் பாக்டீரியாக்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறுகின்றன. இதனால், ஆஸ்துமா அல்லது தோல் எரிச்சலைத் தூண்டும். உங்கள் தலையணைகளை கழுவாமல் இந்த அழுக்குகளை அகற்ற முடியாது. இதனை செய்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். தலையணைகள் வயதாகும்போது அவற்றின் வடிவத்தையும் உறுதியையும் இழக்கின்றன. இந்த தலையணை மோசமான தூக்க தோரணைக்கு வழிவகுத்து, கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தும். அதேநேரத்தில் தலையணையை மாற்றுவது நிம்மதியான தூக்கம் மற்றும் முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும்.

உங்கள் தலையணையை எந்த நேரத்தில் மாற்ற வேண்டும்?

உங்கள் தலையணையை பாதியாக மடித்து, அது மீண்டும் வடிவத்திற்கு வருகிறதா என்று பாருங்கள். அப்படி வரவில்லையென்றால், தலையணையை மாற்றுவதற்கான நேரம் இது. துவைத்து சுத்தம் செய்த பிறகும் தொடர்ந்து கறை இருத்தல், விரும்பத்தகாத நாற்றங்கள் இருந்தால், புதிய தலையணைக்கான நேரம் என்பதைக் குறிக்கிறது. தலையணைக்கு கவரை பயன்படுத்துங்கள். ஓரிரு நாட்களுக்கு ஒருமுறை தலையணைகளை நேரடி சூரிய ஒளியில் வைக்கவும். 

மேலும் படிக்க | இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதா? தூங்கும் முன் இத மட்டும் சாப்பிடுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News