7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை திருத்தம் செய்கின்றது.
7th Pay Commission: ஜனவரி 2025 இல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) 3% அதிகரிக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 53 சதவீதமாக உள்ளன. அகவிலைப்படி மூன்று சதவீதம் அதிகரிக்கப்பட்டால் மொத்த டிஏ மற்றும் டிஆர் 56% ஆக அதிகரிக்கும். மார்ச் 2025 -இல் டிஏ உயர்வுக்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பு வந்தவுடன் ஜனவரி முதலான டிஏ அரியர் (DA Arrears) தொகையும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் சில நாட்களில் பல நல்ல செய்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது ஜனவரி மாத அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பாகும்.
7வது ஊதியக்குழுவின் படி, ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை திருத்தம் செய்கின்றது.
கடத்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் ஜனவரி மாதம் அகவிலைப்படியும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றான.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி தீர்மானிக்கப்படும். இதுவரை அக்டோபர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் கிடைத்துள்ளன.
ஜூலை முதலான ஏஐசிபிஐ எண்களை பற்றி இங்கே காணலாம். ஜூலை 2024: குறியீட்டு எண் 142.7 ஆக இருந்தது. ஆகஸ்ட் 2024: சிறிது குறைந்து 142.6 ஆனது. டிஏ விகிதம் 53.95% ஆனது. செப்டம்பர் 2024: 143.3 ஆக அதிகரிப்பு DA விகிதத்தை 54.49% ஆக உயர்த்தியது. அக்டோபர் 2024: புள்ளிகள் உயர்ந்து 144.5 ஆயின. டிஏ 55.05% -ஐ எட்டியது. நவம்பர் மற்றும் டிசம்பர் 2024க்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. டிசம்பரில் குறியீட்டு எண் 145.3ஐ எட்டினால், டிஏ 56.18% ஆக உயரலாம்.
இதன் அடிப்படையில் ஜனவரி 2025 இல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) 3% அதிகரிக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 53 சதவீதமாக உள்ளன. அகவிலைப்படி மூன்று சதவீதம் அதிகரிக்கப்பட்டால் மொத்த டிஏ மற்றும் டிஆர் 56% ஆக அதிகரிக்கும்.
மார்ச் 2025 -இல் டிஏ உயர்வுக்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பு வந்தவுடன் ஜனவரி முதலான டிஏ அரியர் (DA Arrears) தொகையும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.
சம்பள உயர்வு: ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளாலாம். ரூ.22,000 மாதாந்திர அடிப்படை ஊதியம் பெறும் ஊழியருக்கு, தற்போதைய விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் அகவிலைப்படியாக ரூ.11,660 பெறுகிறார். இது அவரது மொத்த மாத ஊதியத்தை (அடிப்படை + டிஏ) ரூ.33,660 ஆக உயர்த்துகிறது. அகவிலைப்படி 56% ஆக திருத்தப்பட்டால், ரூ.22,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர் அகவிலைப்படியாக ரூ.12,320 பெறுவார். இது அவரது மொத்த ஊதியத்தை (அடிப்படை + DA) ரூ.34,320 ஆக உயர்த்தும்.
தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அளிக்கப்படுகின்றது. சம்பள கட்டமைப்பில் அகவிலைப்படி முக்கியமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு: DA% = [(கடந்த 12 மாதங்களின் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 115.76)/115.76] x 100 / பொதுத்துறை ஊழியர்களுக்கு: DA% = [(AICPI இன் சராசரி (கடந்த 3 மாதங்களின் அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33)/126.33] x 100 (AICPI = அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு.)
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.