Petrol, Diesel Price (June 10): இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல்.  அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 10, 2021, 08:50 AM IST
Petrol, Diesel Price (June 10): இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!! title=

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை  பழக்கத்தில் இருந்தது. ஆனால் அது இப்போது, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி விலைகளை நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை (Petrol, Diesel Price) உயர்த்தி வருகின்றன. சில இடங்களில் சதம் அடிக்கப்பட்ட நிலையில்,  பல இடங்களில் சதத்தை நோக்கி முனேறி வருகிறது. கடந்த சில நாட்களாக, பெட்ரோல் டீசல்  விலையில் சிறிது ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில், இன்று மாற்றம் ஏதும் இன்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு,  96.94 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது  

இந்நிலையில், இன்றும் பெட்ரோல் விலை பெட்ரோல் விலை, மாற்றம் ஏதும் இன்றி, லிட்டருக்கு,  96.94 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது  

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus)  பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் பொது முடக்கம்  அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர்  பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இல்லாமல் இருந்தது.  அதன் பிறகு விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது

ALSO READ | இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

டெல்லியில் பெட்ரோல் விலையில் மத்திய அரசு லிட்டருக்கு ₹32.98 ஆகவும், விற்பனை வரி அல்லது மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி VAT ₹19.55 ஆகவும் உள்ளது.

டீசலைப் பொறுத்தவரை, மத்திய கலால்  வரி ₹31.83 என்ற அளவிலும், மதிப்பு கூட்டு வரி  ₹10.99 ஆகவும் உள்ளது. தவிர, விலையில் ஒரு லிட்டருக்கு  ஆன, குறைந்தபட்சம் டீலர் கமிஷன்  ₹2.6 மற்றும் டீசலுக்கு ₹2 என்பதும் அடங்கும்.

ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News