ITR Filing: இது வருமான வரியை தாக்கல் செய்யும் காலம். 2023-24 நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. இதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். இந்த காலக்கெடுவிற்குள் ஐடிஆர் ஐ தாக்கல் செய்யத் தவறினால் என்ன நடக்கும்? அபராதம் விதிக்கப்படுமா? வருமான வரித்துறையின் நோட்டீஸ் வருமா? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வருமான வரி கணக்கை தாக்க செய்யத் தவறினால் என்ன நடக்கும்?
வருமான வரிக் கணக்கை கடைசி தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால், இந்தியாவில் வரி செலுத்துவோர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். இது அவர்களின் நிதி திட்டத்தை பாதிப்பதோடு அவர்கள் சட்ட ரீதியான சில விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம்.
வரி செலுத்துவோர் (Taxpayers) அனைவரும் தங்கள் ITR ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்வது ஒரு முக்கியமான கடமையாக பார்க்கப்படுகின்றது. ஆனால், பெரும்பாலும் பலரால் இதற்கான காலக்கெடுவிற்குள் இதை தாக்கல் செய்ய முடிவதில்லை. இதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆனால், சரியான நேரத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாமல் போனால், வருமான வரித்துறை அபராதம் விதிப்பதோடு, வருமான வரி அதிகாரிகள் மூலம் உங்கள் கணக்குகள் ஆய்வு செய்யப்படும் நிலையும் ஏற்படக்கூடும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் வரி செலுத்துவோருக்கு தேவையற்ற அலைச்சல், மன அழுத்தம், செலவு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்.
இவை அனைத்தையும் தவிர்க்க சரியான நேரத்தில் ஐடிஆர் தாக்கல் செய்வது அவசியமாகிறது.
ஐடிஆர் காலக்கெடுவை தவறவிட்டால் இந்த பிரிவுகளின் கீழ் அபராதம்
- ஐடிஆர் தாக்கலுக்கான காலக்கெடுவை தவற விடுவது பல பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
= சரியான தேதிக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால், வருமான வரிச் சட்டத்தின் 234F பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படக்கூடும்.
- வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வெவ்வேறு வகையான வரி செலுத்துவோருக்கு மாறுபடும்.
- வரி செலுத்தும் குறிப்பிட்ட பிரிவில் உள்ளவர்களுக்கு நீட்டிக்கப்பட்ட காலக்கெடுக்கள் உள்ளன.
யார் எப்போது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்?
- நிறுவனங்கள் மற்றும் வரி தணிக்கை செய்யப்பட வேண்டியவர்கள் மதிப்பீட்டு ஆண்டின் அக்டோபர் 31 க்குள் வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
- Transfer Pricing Cases: இவற்றுக்கான காலக்கெடு மதிப்பீட்டு ஆண்டின் நவம்பர் 30 ஆம் தேதியாகும்.
ITR: காலக்கெடுவிற்குள் வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம்:
- காலக்கெடுவிற்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாமல், அதற்கு பிறகு தாக்கல் செய்தால், வருமான வரிச் சட்டத்தின் 234A பிரிவின்படி அபராதம் விதிக்கப்படக்கூடும்.
- இதில் வட்டிக் கட்டணங்களும் வசூலிக்கப்படலாம்.
- பிரிவு 234F -ன் படி தாமதக் கட்டணமும் விதிக்கப்படுகின்றது.
- இது வரி செலுத்துபவரின் மொத்த வருமானத்தின் அடிப்படையில் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மாறுபடும்.
ஐடிஆர் தாமதமாக தாக்கல் செய்வதால் உண்டாகும் பிற பிரச்சனைகள்:
- ITR ஐ தாமதமாக தாக்கல் செய்வது அந்த ஆண்டின் இழப்புகளை அடுத்த நிதி ஆண்டிற்கு எடுத்துச் செல்லும் திறனைக் கட்டுப்படுத்துகிறது.
- கடைசி தேதிக்குப் பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டால், சில வகையான இழப்புகளை அடுத்த ஆண்டிற்கு கொண்டுசெல்ல முடியாது.
- வீட்டுச் சொத்து தொடர்பானவை தவிர, வர்த்தகம் மற்றும் மூலதன நஷ்டங்களை எதிர்கால வரவுகளுக்கு ஏற்ப ஆஃப்செட் செய்யும் வாய்ப்பை இழக்க நேரிடலாம்.
- சரியான நேரத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாமல் இருந்தால், சில குறிப்பிட்ட விலக்குகளைப் பெறுவதற்கான வாய்ப்பு இழக்க நேரிடலாம்.
- வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் குறைப்பதற்கும் வரிப் பொறுப்புகளை மேம்படுத்துவதற்கும் இந்த விலக்குகள் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
- தாமதமாக வரி தாக்கல் செய்பவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யக்கூடும். இது தணிக்கை மற்றும் மேலதிக விசாரணைகளுக்கு வழிவகுக்கும்.
ITR ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்வதற்கான அவசியம்:
- நிதி அபராதங்களை தவிர்க்கலாம்
- வட்டிக் கட்டணத்தை தவிர்க்கலாம்
- ஆய்வுகள் மற்றும் பிற சிக்கல்களைத் தவிர்க்கலாம்
- தணிக்கைகளை தடுக்கலாம்.
சரியான நேரத்தில் சரியான மூறையில் ITR-ஐ தாக்கல் செய்ய வருமான வரி செலுத்துவோர் இதற்கான ஏற்பாடுகளை முன்னரே செய்து, தங்களுக்கான ஐடிஆர் படிவத்தை பற்றி தெரிந்துவைத்துக்கொண்டு, தேவையான ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான அப்டேட்: GPF புதிய வட்டி விகிதம் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ