நாம் பெறும் பரிசுகளுக்கும் வருமான வரி விதிக்கப்படுமா? Tax Free Gits எவை?

Income Tax: பரிசுப் பொருட்களுக்கு ஏன் வருமான வரி விதிக்கப்படுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். பரிசுகள் பிற மூலங்களிலிருந்து வரும் வருமானமாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 31, 2024, 05:42 PM IST
  • பரிசுகளுக்கு ஏன் வருமான வரி விதிக்கப்படுகின்றது?
  • அனைவரிடமிருந்தும் பெறும் பரிசுகளுக்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை
  • இந்த விதிகளை கவனத்தில் கொள்ளவும்.
நாம் பெறும் பரிசுகளுக்கும் வருமான வரி விதிக்கப்படுமா? Tax Free Gits எவை? title=

Income Tax: திருமணம், பிறந்த நாள், பண்டிகை, குடும்ப விழாக்கள் என இப்படிப் பல சந்தர்ப்பங்களில் நம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களிடம் இருந்து பரிசுகளை நாம் பெறுவது உண்டு. நாம் அனைவரும் இந்த பரிசுகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது பல பரிசுகள் பற்றிய தகவல்களை நாம் கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) ஜூலை 31, 2024க்குள் தாக்கல் செய்ய வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், பரிசுகளுக்கான வருமான வரி விதி என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வது மிக அவசியம். அவற்றை பற்றி இங்கே காணலாம். 

பரிசுகளுக்கு ஏன் வருமான வரி விதிக்கப்படுகின்றது?

பரிசுப் பொருட்களுக்கு ஏன் வருமான வரி விதிக்கப்படுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். பரிசுகள் பிற மூலங்களிலிருந்து வரும் வருமானமாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நிதியாண்டில் நீங்கள் பெற்ற பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருந்தால், அதற்கு வரி விதிக்கப்படும். இது உங்கள் ஆண்டு வருமானத்தில் சேர்க்கப்படும். இதற்குப் பிறகு, உங்கள் வரி அடுக்குக்கு ஏற்ப உங்களிடமிருந்து வருமான வரி வசூலிக்கப்படும். 

மேலும் படிக்க | பயணிகள் வாகனத்துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு! எல்லோரும் அலர்ட்டாயிட்டாங்க!

அனைவரிடமிருந்தும் பெறும் பரிசுகளுக்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை

அனைத்து வகையான பரிசுகளுக்கும் வருமான வரி விதிக்கப்படும் என்பது இல்லை. உங்களுடன் இரத்த உறவு வைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பரிசுகளைப் பெற்றால், அத்தகைய பரிசுகளுக்கு வருமான வரி இல்லை. உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எத்தனை மதிப்புள்ள பரிசுகளையும் நீங்கள் கொடுக்கலாம் அல்லது வாங்கலாம். ஆனால் உங்கள் நண்பர்கள் யாரேனும் உங்களுக்கு ரொக்கம், நகைகள், பங்குகள் அல்லது 50 ஆயிரத்திற்கு மேலான மதிப்புள்ள வேறு ஏதேனும் பரிசு கொடுத்தால், அது வரி வரம்பிற்குள் வரும். உங்கள் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் உங்கள் உறவினர்கள் என்ற வர்ம்பில் வருவதில்லை. நீங்கள் அவர்களுடன் இரத்த உறவு கொண்டவர்கள் அல்ல. ஆகையால், அவர்களின் பரிசுகள் வரி வரம்பிற்குள் வருகின்றன.

இந்த விதிகளையும் கவனத்தில் கொள்ளவும்: 

- கணவன்-மனைவி இடையே நடக்கும் பரிசுப் பரிவர்த்தனைகளுக்கு வரி இல்லை. ஏனெனில் பரிசுப் பரிவர்த்தனைகளின் வருமானம் வருமானக் கிளப்பிங்கின் கீழ் வருகிறது.

- திருமணத்தில் பெறப்படும் பரிசுகளுக்கு முற்றிலும் வரி விலக்கு உள்ளது. அதேசமயம் முதலாளியிடமிருந்து பெறப்படும் பரிசு வரி வரம்பிற்கு உட்பட்டது.

- நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்களிடம் இருந்து ஓராண்டில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பரிசு பெறப்பட்டால், அதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மதிப்பு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் வரி செலுத்த வேண்டும். 

- நெருங்கிய உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட சொத்துக்கு வரி பொறுப்பு இல்லை. ஆனால் அந்த சொத்தை விற்றால் வரி செலுத்த வேண்டும். 

- உயிலில் பெறப்பட்ட சொத்துக்கு வரி இல்லை, ஆனால் இந்த சொத்தை விற்றால் வரி (Tax) செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | வருமானமே கொஞ்சம்! கோடீஸ்வரராவது கனவு தான் என பெருமூச்சு விடுபவரா? கனவை நனவாக்கும் SIP

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News