Post Office RD: மாதம் ரூ.5000 முதலீடு செய்து லட்சாதிபதி ஆகலாம்!

Post Office Recurring Deposit Scheme : செப்டம்பர் 29 அன்று,  மத்திய அரசு தொடர் வைப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தியது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 4, 2023, 01:27 AM IST
  • சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும்.
  • 10 வருடங்களில் 8 லட்சத்துக்கும் மேல் முதலீடு செய்வதற்கான வழிமுறை
  • அஞ்சல் அலுவலக RD மீதான அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்.
Post Office RD: மாதம் ரூ.5000 முதலீடு செய்து லட்சாதிபதி ஆகலாம்! title=

Post Office RD: பாதுகாப்பான முதலீட்டுடன் சிறந்த வருமானத்தை அளிக்கும் வகையில், தற்போது தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இவற்றில் அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டம் இப்போது மேலும் பலனளிக்கிறது. இதற்குக் காரணம், அதன் மீதான வட்டி விகிதத்தை சமீபத்தில் அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இந்தத் திட்டத்தில், வெறும் 10 மாதங்களில் ரூ.8 லட்சத்துக்கு மேல் நிதி திரட்ட முடியும்.

அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்

நீங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு தொடர் டெபாசிட் செய்ய விரும்பினால், இப்போது நீங்கள் முன்பை விட அதிக வட்டி கிடைக்கும். செப்டம்பர் 29, 2023 அன்று மத்திய அரசு சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மாற்றியது. அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் புதிய கட்டணங்கள் பொருந்தும். நிதி அமைச்சகம் இப்போது தபால் அலுவலக RD (Post Office Recurring Deposit) மீதான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக 5 ஆண்டுகளுக்கு உயர்த்தியுள்ளது. அதாவது முதலீட்டில் (Investment Tips) முன்பை விட இப்போது அதிக நிதியை திரட்ட முடியும். புதிய கட்டணங்கள் அக்டோபர் 1, 2023 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.

50 சதவீதம் வரை கடன் பெறும் வசதி

அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டத்தின் கீழ் நீங்கள் கணக்கைத் தொடங்கலாம். இதில் முதலீடு 100 ரூபாயில் இருந்து தொடங்கலாம். போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால் இந்தக் காலகட்டம் முடிவதற்குள் கணக்கை மூட விரும்பினால், இந்தச் சேமிப்பு திட்டத்திலும் இந்த வசதி உள்ளது. முதலீட்டாளர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சிக்கு முந்தைய மூடுதலைச் செய்யலாம். இதில் கடன் வசதியும் வழங்கப்படுகிறது. கணக்கு ஓராண்டு செயல்பாட்டில் இருந்த பிறகு, டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெறலாம். இருப்பினும், கடனுக்கான வட்டி விகிதம் வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகம்.

மேலும் படிக்க | RBI Repo Rate:வட்டி விகிதங்களை மாற்றுமா ரிசர்வ் வங்கி? கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்?

10 வருடங்களில் 8 லட்சத்துக்கும் மேல்  முதலீடு செய்வதற்கான வழிமுறை

போஸ்ட் ஆபிஸ் ஆர்டியில் முதலீடு மற்றும் வட்டியைக் கணக்கிடலாம்.  இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 5,000 முதலீடு செய்தால், அதன் முதிர்வுக் காலத்தில் மொத்தம் ரூ.3 லட்சத்தை டெபாசிட் செய்வீர்கள். அதாவது ஐந்து வருடங்கள். அதற்கான வட்டி 6.7 சதவீதமாக இருக்கும். முதலீட்டு தொகைக்கும் ரூ.56,830 வட்டி கிடைக்கும். அதாவது ஐந்து வருடங்களில் உங்கள் மொத்த நிதி ரூ.3,56,830 ஆக இருக்கும். இப்போது உங்கள் RD கணக்கை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 10 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை ரூ.6,00,000 ஆக இருக்கும். இதன் மூலம், இந்த டெபாசிட்டுக்கான வட்டித் தொகை 6.7 சதவீதமாக ரூ.2,54,272 ஆக இருக்கும். அதன்படி பார்த்தால், 10 ஆண்டுகளில் உங்கள் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த நிதி ரூ.8,54,272 ஆக இருக்கும்.

RD க்கு மட்டுமே அரசாங்கம் வட்டி விகிதத்தை உயர்த்தியது

அஞ்சல் அலுவலகத்தின் சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்பட்டு வரும் நிலையில்ல், அவை 29 செப்டம்பர் 2023 அன்று மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்முறை அரசு அஞ்சலக ஆர்டிக்கு மட்டுமே வட்டியை உயர்த்தியுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), PPF, கிசான் விகாஸ் பத்திரம் (KVP) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY) ஆகியவற்றில் பழைய வட்டி விகிதங்கள் தொடரும். அதாவது, வடி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த திட்டங்களின் வட்டி விகிதங்கள் எந்த மாற்றமும் இல்லை.

மேலும் படிக்க | 40 சதவிகித ஏற்றுமதி வரி திரும்ப பெறப்படுமா? கண்ணீர் சிந்தும் வெங்காயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News